Ad Widget

பாதுகாப்பான ரயில் கடவை கோரி ஆர்ப்பாட்டம்; யாழ். – காங்கேசன் துறை ரயில் சேவை பாதிப்பு

யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் பாதுகாப்பான ரயில் கடவை அமைக்கக் கோரி, பொது மக்கள் ரயில் பாதையை மறித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அந்த பாதுகாப்புக் கடவையில் இன்று (நவ.13) புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். அதனையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் அந்தப் பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட இளம் குடும்பத்தலைவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த ஊரவர்கள், பாதுகாப்பற்ற ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதி தொடருந்து தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் ஸ்தம்பித்தது.

இதே கடவையில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.

சம்பவ இடத்துக்கு ரயில்வே திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.

பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.

Related Posts