- Thursday
- May 7th, 2026
மல்லாகம் நீதிமன்றில் திறந்த மன்ற நடவடிக்கையின் போது விளக்கமறியல் சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருளை கைமற்றிய மற்றொரு சந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டறிந்தனர். அதனால் சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த மன்று, அவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன், நீதிமன்ற வளாகத்துக்குள் வருபவர்கள் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்படும் நிலையில் கஞ்சா போதைப்பொருளை ஒருவர்...
யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை, தேவாலய வீதியைச் சேர்ந்த நல்லகுமார் நிசாந்தன் (வயது -17) என்ற சிறுவர்...
சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் தீர்மானமாக போதிய நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டுள்ளார் என்பதை அடையாளம் கண்டதையிட்டு...
நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். அவர் நுவரெலியா மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டள்ளார். இதேவேளை தான் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி...
அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுன் நகை மற்றும் பணத்துடன் ஐந்து பேர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 450,000 பெறுமதியான களவாடப்பட்ட பணம் மற்றும் 20 பவுன் களவாடப்பட்ட நகைகள் மீட்கப் பட்டதோடு குறித்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு சிங்கள இனத்தைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் மூவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மையினமான முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இடம்பெறவில்லை. சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் தலா ஒருவர் நியமிக்கவேண்டும் என பேராசிரியர்கள் இருவரும் மருத்துவ வல்லுநர் ஒருவரும் இணைந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அவர்களது கடிதத்தில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று காலை 9.30 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராகம் பதவி வகித்த கணபதிப்பிள்ளை மகேசன், முதன்முறையாக மாவட்டச் செயலாளராக...
யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வன்முறைக்கு காரணமான மாணவன் தப்பித்த நிலையில் அவரால் அழைத்துவரப்பட்ட 6 பேரில் ஒருவர் மாணவர்களால் பிடிக்கப்பட்டு...
போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி மீது அமெரிக்கா தடைகளை விதிக்கிறது.இது தொடர்பில் “த கார்டியன்” பத்திரிகையில் வெளியாகிய செய்தியின் தமிழ் வடிவம் • பாரிய மனித உரிமை மீறல்களுக்காக சவேந்திரசில்வா கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் • உள்நாட்டுப் போரின் இறுதி கட்டங்களில் 70,000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர் 2009 ஆம் ஆண்டு தமிழ்ப் புலிகளினுடனான மோதலின் இறுதிக்கட்டங்களில்...
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதைச் சம்பவங்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைக் கேட்டறியும் அமர்வுகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான 7 பேர் கொண்ட அந்தக் குழுவில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் தாரக வர்ணசூரிய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான...
யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். நிலைமாறுகால நீதி தொடர்பான...
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி மத மாற்றம் செய்வதற்காக மாத வருமானம் பெறுகிறார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன். நேற்றையதினம் யாழில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் மனைவியின் பெயர் சாவித்திரி. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தனது வருவாய்...
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இரண்டாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின் போது மீட்கப்பட்ட எச்சங்களின் அடிப்படையில் 3 நபர்களின் எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், அகழ்வுப் பணிகளை இன்றும் முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் எஸ்.லெலின்குமார் உத்தரவிட்டார். மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு நிலையத்துக்கான கட்டடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார். மேலும் இலங்கை அரசாங்கமானது ஐரோப்பிய...
பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைகளுக்கான சகல பரீட்சைகளுக்கும் உரிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முறை அடுத்த வருடம் முதல் ஒன்லைன் முறையின் கீழ் இடம்பெறவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து இந்த முறைமையை பின்பற்றுவது நோகக்கமாகும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. சகல மாணவர்களுக்குமான தனியான இலக்கங்கள் இதன் கீழ் வழங்கப்படவிருக்கின்றன. மாணவர்களின் பெறுபேறுகள் உட்பட வெளிக்கள செயற்பாடுகள்...
பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு ஃபேஸ்புக் ஊடாக உரிமை கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மூடிக்கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட...
நாட்டின் ஐந்து நகரங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலேயே தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் எனவும் தேசிய கட்டட...
Loading posts...
All posts loaded
No more posts
