இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்; முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸில் சரண்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். சட்டத்தரணி சந்திரசேகரனின் ஏற்பாட்டில் முன்னாள் போராளி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். “எனது கட்சிக்காரரை இராணுவத்தினம் தேடிவந்தனர். எனினும் சிப்பாயைத்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் சுற்று அச்சுறுத்தல் காணப்படுகிறது – அனில் ஜாசிங்க

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார...
Ad Widget

பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும்...

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற கமி...

ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுமந்திரனின் கருத்து தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக்...

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் – ஜனாதிபதி

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட்-19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்தபோதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும்...

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்!!

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில...

வீட்டுத் தோட்டம் அமைக்க முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஆறுதல்’ நிறுவனம் அழைப்பு!

முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் போசகருமான சுந்தரம் டிவகலாலா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண கூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முன்வருமாறும், அதற்கான வழிகாட்டலை ‘ஆறுதல்’ நிறுவனம் வழங்கும் எனவும்...

சுமந்திரனின் கருத்தை வன்மையான கண்டிக்கின்றேன் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்தை வன்மையான கண்டிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டம் என குறிப்பிட்ட அவர் அயுதம்...

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல், மருத்துவ நிபுணர் சன்ஜீவ முனசிங்க

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கோரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்று முழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் நாயமாகக்...

அலுவலகங்களில் வரவு பதிவேட்டில் கையொப்பமிட பொதுவான பேனாவைப் பயன்படுத்த வேண்டாம்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கோரோனா வைரஸ் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்றது. இதன்போது...

இலங்கை சரியான பாதையில் செல்கின்றது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளின் ஊடாக இலங்கை சரியான பாதையில் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, பரிசோதனைகளை அதிகரித்ததன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களை விரைவாக கண்டறிய முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. கட்டுப்படுத்துதல் மற்றும்...

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8...

அங்கஜன் கோரிக்கை நிறைவேற்றம்! அரச உத்தியோகத்தர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமைக்கு மத்தியில் செயலாற்றி வரும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் (06) அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிராம...

கொரோனா நோயைக் கட்டுப்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையினைப் படிப்படியாக ஆரம்பித்தல்!!

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கோவிட் - 19 புதியதொரு நோயாக உலகின் கவனத்தை ஈர்த்தது. உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலிருந்தே இது முழுமையாக புதியதொரு நோய் எனவும், அவர்களும் இந்த நோய் தொடர்பாக இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் மிகவும் நேர்மையாகத் தெரிவித்து வந்தனர். சர்வதேசப் போக்குவரத்தினைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே 2020 பெப்ரவரி...

மகளைக் காதலித்த இளைஞனை பொலிஸாரை வைத்து தாக்கிய தந்தை

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர். சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சிவில் உடையில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அட்டகாசத்தில்...

இரண்டு மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “கடந்த...

இராணுவத்தினரின் தாக்குதலில் பெண் படுகாயம்; உடமைகளுக்கும் சேதம்!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (மே 8) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்...

உடுவில் கொள்ளை; பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த சந்தேக நபரை விடுவித்த சுன்னாகம் பொலிஸார்

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று...

வடமாகாணத்தில் வியாபார நிலையங்களில் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியவை – சுகாதாரத் திணைக்களம்

நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா தொற்றுநோயானது இலங்கையிலும் பரவி வருவது தாங்கள் அறிந்ததே. கோரோனா...
Loading posts...

All posts loaded

No more posts