- Tuesday
- September 1st, 2026
20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன்...
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி...
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இனத்தின் விடுதலைக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படும் முயற்சியை மேற்கொள்வோம். இதற்காகவே இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கடந்த சனிக்கிழமை சிறுப்பிட்டியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன்...
எமது இயக்கத்தின் அரசியல் கொள்கைகளிற்கு முரணாக நடந்ததால் உங்களை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனிற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பின்வரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. | ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை எமது அரசியல்...
பிராந்திய வல்லரசுக்கும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் காற்றில் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்ற நாடு விடுகின்ற மாபெரும் தவாறக இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் பிழையினூடாக தமிழர்களின் எதிர்ப்பை மாத்திரமல்லாது, முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது, முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும்...
தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், நடைபெறவுள்ள நடைபவனியில் தாங்கள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட...
20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை இணைத்துக்கொண்டு...
2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Online ஊடாக விண்ணப்பித்தல் குறித்த மேலதிக...
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவாமற்றும் கிழக்கு மாகாணங்களிலும்முல்லைத்தீவு மற்றும் வவுனியாமாவட்டங்களிலும் பல இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றநிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டடுள்ளது. குறித்த சட்டமூல வரைபு நேற்று (வியாழக்கிழமை) காலை அரச அச்சகத் திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல பத்திரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு...
யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ,மேலதிக அரசாங்க...
நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய செயற்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு, அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறாக வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும் அதுதொடர்பான தகவல்களையும் தத்தமது அலைபேசிக்கு குறுந்தகவலாக மாதாந்தம் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டையை உள்ளீர்த்து, தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டு வந்த திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய இருப்பு...
கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸார்...
யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். வளிமண்டல கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மாதங்களுக்கு தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. யாழில் கடந்த இரண்டு நாட்கள் மட்டும் 90.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது....
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைபு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனையைத்...
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில்...
சிறிலங்கா சுதந்திரகட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று ( செப்.2) காலை ருத்திராபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...
Loading posts...
All posts loaded
No more posts
