மேலும் 47 பேருக்கு கோரோனா தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 47 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று திங்கட்கிழமை (19-10-2020) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். அவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 43 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட...

யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2000ஆம் ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக...
Ad Widget

சமூகத்திலிருந்து பரவும் கொரோனா கொத்தணிகளால் அதிக ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சமூகத்திலிருந்து பரவும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். சமூகத்திலிருந்து பரவும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார். கோவிட் -19 நோயாளிகளின் மூலம் இதுவரை கண்டறியப்பட்டிருந்தாலும், கண்காணிக்கப்பட்டிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அந்த மூலத்தை...

வவுனியா வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வவுனியா, பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது. மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று...

பருத்தித்துறை சாலை நடத்துனருக்கு மருதங்கேணி கோவிட் – 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோவிட் -19 நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நிலையில் முதலாவது கோவிட்...

இளவாலையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் 10 மாதக் குழந்தை உயிரிழப்பு!!

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சோகம் யாழ்ப்பாணம், இளவாலையில் நடந்துள்ளது. இளவாலை, உயரப்புலத்தைச் சேர்ந்த தனீஸ்வரன் அக் ஷ்யன் என்ற 10 மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளான். குழந்தைக்கு நேற்றுமுன்தினம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. முதலில் குழந்தைக்கு பரசிட்டமோல் வழங்கியுள்ளனர் பெற்றோர். ஆனால் காய்ச்சல் தொடர்ந்ததால் அவர்கள் நேற்றுக்காலை...

பல்கலை. பரீட்சைகளை ஒன்லைனில் நடத்தும் திட்டத்தில் மானிய ஆணைக்குழு கவனம்!!

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையம் (Online) ஊடாக நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸ் பரவல் நிலமை காரணமாப பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இது குறித்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்...

புங்குடுதீவு பெண் பயணித்த பருத்துறை இ.போ.ச பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதியானது!!

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவு பெண் பயணித்த யாழ்.பருத்துறை இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. குறித்த நடத்துனருக்கு நடத்தப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி தகவலை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார் அத்தோடு புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு...

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 58 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய மூவர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா...

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று(16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த...

உழவு இயந்திரம் மோதி பொலிஸ் சார்ஜென்ட் பலி!!

முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் சிலாபத்துறை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. கொக்கிளாய் நோக்கி பயணித்த உழவு இயந்திரமொன்று, வீதி போக்குவரத்து கடமையிலிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ்...

உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது!!

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “க.பொ.த. உயர்தர பரீட்சைகள் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று...

யாழில் கைக்குண்டுடன் இளைஞர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,...

யாழ்.மாநகர சபை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணனை நீக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு தமிழ் காங்கிரஸ் கடிதம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய...

சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்களான விசேட வர்த்தமானி வெளியானது!

தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும்...

நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தனி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் 15, 20...

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சுமந்திரன் முக்கிய அறிவிப்பு!

20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.கே.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகள்!

பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரும் அதற்கு...
Loading posts...

All posts loaded

No more posts