வடக்கு மீனவர்களை வன்முறைக்கு தூண்டும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளசை கண்டிக்கின்றோம் – சுமந்திரன் எம்.பி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாது மீனவர்களை வன்முறைக்கு தூண்டும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன், கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீன்பிடி சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துகின்றார். யாழ்ப்பணத்தில் நேற்று இடம்பெற்ற...

சுப்பிரமணியம் சுவாமி அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
Ad Widget

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது – மக்களுக்கு எச்சரிக்கை!

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான...

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் – ஜி.எல்.பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது. இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும். எனினும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம்,...

வல்லிபுரம் ஆழ்வார், சந்நிதி முருகன் ஆலயங்களில் பொலிஸ் மா அதிபர் வழிபாடு

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை கிளிநொச்சியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்....

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டம்- எம்.ஏ. சுமந்திரன்

எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்

மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு இருக்கின்றபோதும் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார். அரசாங்கம் தேர்தலை நடாத்துவதற்கு...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில

நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 15 ரூபாயாகவும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 25 ரூபாயாகவும் அதிகரிக்க...

முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு – மக்கள் விசனம்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப் பகுதியில் கடும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. வாய்க்கால்களில் மண் ஏற்றப்பட்டு துரிசும் உடைத்தெறிய பட்டு மண் ஏற்றப் பட்டு வருகின்றது. இதனால் வெள்ள...

யாழ். பல்கலையில் மீண்டும் கோவிட் தடுப்பூசி – மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கோவிட்- 19 தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின்...

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின்...

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா பரவல் நடவடிக்கை காரணமாக காணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள யாழ் கடற்தொழிலாளர்கள்!!

வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகிலிருந்த...

கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டமைக்கு நன்றியாக மாசற்ற சுவாசத்திற்காக மரங்களை நாட்டுவோம்- யமுனாநந்தா

கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டமைக்கு நன்றியாக மாசற்ற சுவாசத்திற்காக மரங்களை நாட்டுவோம் என வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு மக்களை வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனாத் தொற்றுத் தொடர்பாக தமிழில் விழிப்புணர்வினை ஏற்படுத்திய அனைத்து சமூக ஊடகங்களுக்கும் நன்றிகள். உலக அளவில் பரவிய இப்பாரிய தொற்றின்போது...

வடமராட்சியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று மூவரிடம் வழிப்பறி

வடமராட்சி பகுதியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று, ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி- வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வல்லை பகுதியில் வெள்ளை நிற காரில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள்,...

தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் ஆபத்தான நிலையில்! கணவன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு பிள்ளையின் இளம் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே...

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!!

கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளும் போடப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா புதனன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்!!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். அவர் வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்...

நாட்டில் முதன் முறையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!

நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
Loading posts...

All posts loaded

No more posts