புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – இலங்கை மருத்துவ சங்கம்

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவர், கலாநிதி பத்மா...

யாழிலும் கிளிநொச்சியிலும் வெடித்துச் சிதறியுள்ள எரிவாயு அடுப்புக்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அம்பாறை- சாய்ந்தமருது பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவவொன்று பதிவாகி இருந்தது. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை நேற்றைய தினம்,...
Ad Widget

யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்- ஒருவர் கைது

யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும்...

Omicron கண்டறியப்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை!!

புதிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை செய்யப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என...

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதிக்கு கௌரவிப்பு!

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆதரவில் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு, பொன்னாடை போர்த்தி நினைவு...

கிளிநொச்சியில் 6 நீர்பாசன குளங்கள் பெருக்கெடுப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. 25 அடி...

மீண்டும் அதிர்ச்சி..! பாடசாலை சென்ற 113 மாணவர்களுக்கு கொரோனா!

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். இன்று (26) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர்...

எரிவாயு கசிவினால் அடுத்தடுத்து இடம்பெறும் வெடிப்புச் சம்பவங்கள் – ஆபத்திலிருந்து தப்ப மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்சார கட்டமைப்புகளை சோதனையிட்டு...

குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்.குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என கண்காணிப்புகள் மற்றும் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, குருநகர் வீதியில் டயர் கொழுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் நகர்புறங்களை விடவும் கிராமங்களில் கொரோனா பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் நகர்புறங்களிலேயே இந்த வீதம் அதிகளவில் காணப்பட்டதாகவும், எனினும் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களை மீறி பொதுமக்கள்...

கொரோனா அச்சுறுத்தல்: பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தலில்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்...

கொவிட் பரவல் அதிகரிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு

நாட்டில் மேலும் 529 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 559,605 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார்....

பட்டதாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு!

தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்றமுன்னதினம் (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ.41,000 ஆக...

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

கிண்ணியாவில் 06 பேரின் உயிரை பறித்த படகுப் பாதை விபத்து : கிண்ணியா நகர சபை தலைவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்த படகுப் பாதை விபத்து தொடர்பில் கிண்னியா நகர சபை தலைவர் எஸ்.எச்.எம். நளீம் பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டார். கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், விசாரணைகளினிடையே இவ்வாறு கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்....

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு தள்ளுபடி

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி இன்று (22) சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர். வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற...

அரசை விமர்சிக்க அரச ஊழியர்களுக்குத் தடை!!

சமூக வலைத்தளங்களின் மூலம் அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரச ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட...

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் யோசனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம்...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 12 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 127ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

நாளையிலிருந்து மீண்டும் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை நாளையிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts