Ad Widget

எரிவாயு கசிவினால் அடுத்தடுத்து இடம்பெறும் வெடிப்புச் சம்பவங்கள் – ஆபத்திலிருந்து தப்ப மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மின்சார கட்டமைப்புகளை சோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பதனை உறுதி செய்துக் கொள்ளுமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த இடங்களிலுள்ள திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையினால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்திவிட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் எரிவாயு நாற்றம் வீசினால் மின்சார குமிழிகளை ஒளிர செய்யாமல், கதவு, ஜன்னல்களை திறந்து, நாற்றம் குறைவடையும் வரை சமையல் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts