- Sunday
- April 5th, 2026
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். வாய்மொழி...
யாழ் மாவட்டத்தில் டெங்குநோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937டெங்குநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவுசெய்யப்படவில்லை என யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் பருவமழைக்காலம் ஆரம்பிக்க...
மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் இந்நிலை இவ்வாறே இருந்தால் இது வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்தின் முதல்...
செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு...
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் ஞாயிற்றுக்கிழமை (7) திறந்து வைக்கப்பட்டது. பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 5 மணியளவில் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கடற்றொழில்...
சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 29 ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை 10ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிடவும். மாவட்ட வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு;
இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும்...
வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடியை முன்னால் வைத்த அந்த மக்களை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதாக தெரிவித்த ஜனாதிபதி, வடக்கிற்கு புதிய...
வட்டுவாகல் பாலத்தின் நிர்மானப்பணிக்காக அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை திரை நீக்கம் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அனுரகுமார திசாநாக்க பங்குபற்றியிருந்தார். ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பெயர்ப்பலகையின் திரையினை பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்கள் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் விமல் ரட்நாயக்க, அமைச்சர் சந்திரசேகரன்,பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன். பிரதி அமைச்சர் உபாலி,பாராளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று புதன்கிழமை (03) வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் அவதானத்துடன்...
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959...
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை - மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை...
போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், மீனவ...
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் ஜனாதிபதி மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட்...
Loading posts...
All posts loaded
No more posts
