யாழ் பல்கலை மாணவர்களை எச்சரித்து வீடுகளுக்கு கடிதங்கள்; அச்சத்தில் மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். (more…)

தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்து: ஐவர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி தப்பியோடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)
Ad Widget

50,821 பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம்

50,821 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். (more…)

குடாநாட்டில் கடல்நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டன

குடாநாட்டில் மழை வெள்ளம் தேங்காதவாறு தொண்டமானாறு, அராலி, அரியாலைப் பகுதிகளில் உள்ள கடல் நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மழை வெள்ளம் கடலுக்குள் செலுத்தப்படுகின்றது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)

மருத்துவர் சிவன்சுதனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிவன் சுதனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: (more…)

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை யாழ்.ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழாராய்ச்சி உயிர்கொடை உத்தமர்கள் நினைவாலய நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

பணிப்புறக்கணிப்பிற்கு யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆதரவில்லை

யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என யாழ்.மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மு.ரெமீடியாஸ் நேற்று தெரிவித்தார். (more…)

யாழில் ஒன்பதரை மணித்தியால மின்வெட்டு

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

மழை, வெள்ளம் காரணமாக யாழில் 1648 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடைமழைக் காரணமாக 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5656 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அவர்கள் நேற்றய தினம் தெரிவித்தார். (more…)

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் றொபின்சன் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை அவரது இல்லத்தில் நேற்றயதினம் சந்தித்தார். (more…)

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)

பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்ல வேண்டும் என உத்தரவு!

சுதந்திர பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 12.1.2013 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.அம்மாநாட்டுக்கு அண்மையில் நியமனம்பெற்ற சகல பட்டதாரிகளும் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமது செலவில் சென்று வரவேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். (more…)

சட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்?! நீதவான்களும் ஆதரவு

சட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. (more…)

இரு கடைகளில் கொள்ளை

யாழ். ஆஸ்பத்திரி வீதி புகையிரத நிலையச் சந்தியிலுள்ள இரு கடைகள் உடைக்கப்பட்டு அக்கடைகளிலிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

யாழில் காற்றுடன் கூடிய மழை மேலும் ஒரு கிழமைக்கு தொடரும்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 54.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய அவதானிப்பாளர் ஜே.டி.நுவான் தெரிவித்தார். (more…)

வடமராட்சியில் மீன் பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை

வல்வெட்டித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை காணமல்போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல இது தேர்தல் கூட்டமைப்பு – பாரா பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 04.04.2012 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. (more…)

நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் – ஜனாதிபதி

நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (more…)

யாழ்.நகரின் சில பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம் தடை!

ஆரியகுளம் சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் யாழ்.மாநகர சபையின் நீர் விநியோகக்குழாய் சேதமடைந்த மையினால் நகரின் சில பகுதிகளுக்குக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. (more…)

தம்பதியரைத் தாக்கிய இளைஞர்களுக்கு மறியல்

இரவுவேளை மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியரைத் தாக்கிய இளைஞர்கள் மல்லாகம் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts