Ad Widget

நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் – ஜனாதிபதி

president-mahinda-rajapaksaநாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாட்டுக்கான பாரிய பொறுப்புக்களை ஏற்று முக்கியமான தீர்மானங்களை கடந்த காலங்களில் தாம் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சின் தேசிய மாநாடும் உள்ளூராட்சி சபைகளின் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

தற்போது உள்ளூராட்சி சபைகள் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருகின்றன. சில உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அளப்பரிய சேவை புரிந்து கௌரவத்தையும் விருதுகளையும் பெற்றுக் கொள்கின்றனர். இதேபோன்று ஏனைய உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிகளும் அர்ப்பணிப்புள்ள சேவை செய்து கௌரவத்துக்கும் விருதுக்கும் தம்மை தகுதியாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த 500 வருட காலங்களின் பின் எமது காலத்திலேயே முக்கிய வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நகரங்களுக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாம் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று புரட்சி செய்துள்ளோம். சிறந்த வளங்கள் கிராமப்புறங்களிலேயே உள்ளன. அதன் பயனை மக்கள் அனுபவிக்கச்செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

அங்கு அவர், ‘பொதுமக்கள் ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்காக இல்லை. மக்கள் பிரதிநிதிகளே பொதுமக்களுக்காக உள்ளனர்’ என்றும் சுட்டிக்காட்டினார்.எப்போதும் ஒரு சிறு குழுக்களுக்கு மட்டும் நகரங்களின் அதி காரங்களை விட்டுவிட முடியாது. கிராமங்களைக் கட்டியெழுப்பும் புரட்சியை நாம் பலமாக முன்னெடுப்போம். பண்டுகாபய அரசனின் ஆட்சிக் காலத்தைப் போன்று கிராம சபை முறையை ஏற்படுத்த நாம் முனைப்புடன் உள்ளோம்.

நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது என பண்டுகாபய அரசனின் ஆட்சிக் காலத்தைப் போன்று கிராம சபை முறையை ஏற்படுத்த நாம் முனைப்புடன் உள்ளோம்

நாட்டை மீட்டு ஒன்றிணைக்க நாம் முற்பட்டபோது அதற்கு எதிரான பல தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. சில சக்திகள் தொடர்ச்சியாக இடையூறுகளை விளைவித்தன. நாட்டை மீட்டு அதனை அபிவிருத்தி செய்ய நாம் மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்த போது அது மெதமுலன திட்டம் என அலட்சியப்படுத்தினர்.

இதிலிருந்து அவர்கள் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள் என்பது புலனாகிறது. நாம் எமது ஆட்சிக் காலத்தில் சகல வரவு செலவுத் திட்டங்களிலும் உள்ளூ ராட்சி சபை பிரதேசங்களை முன்னேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். இது எமது பொறுப்பும் எமக்கான உரித்துமாகும்.எனவும் தெரிவித்தார்

Related Posts