- Tuesday
- April 7th, 2026
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவரான இவர் (more…)
யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது குறித்து பல்கலை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நாளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். (more…)
யாழ். கோப்பாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். மானிப்பாய் வீதியில் இருந்து வருகை தந்த பவுசர் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்த வருகை தந்த மோட்டார் சைக்கிளும் கோப்பாய் சந்தியை கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை அங்கிருந்து விலக்கியுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் (more…)
காஸ் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், காஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. (more…)
விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி இதுவரை நடைமுறையில் ஆயிரம் ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளது. (more…)
யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விளையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞன் சனசமூக நிலையத்தில் மின்குமிழ் ஒன்றை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி நேற்று மாலை 5 மணியளவில் பலியாகியுள்ளார். (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டமொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான (more…)
கைகலப்பில் ஈடுபட்ட பஸ் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததை தொடர்ந்து தனியார் பஸ் சேவைகள் நேற்று 3 மணியுடன் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார். (more…)
வெளிமாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கடமைக்கு சென்ற ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்கு அனுமதிகள் மறுக்கப்படுவதாக கூறி ஆசியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக (more…)
இயந்திர கோளாறு காரணமாக யாழ். மாதகல் கடற் பரப்பில் கரையொதுங்கிய இந்திய ரோலர் படகு மற்றும் 7 மீனவர்களும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்தார். (more…)
சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.தங்களுடைய தீர்மானங்கள் தொடர்பில் சங்கத் தலைவருக்கும் பணிப்பாளர் சபைக்கும் அறிவித்துள்ளார்கள். சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. (more…)
யாழ். பாசையூர் பகுதியில் 23 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயதுடைய சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். (more…)
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸாரை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இன்று திங்கட்கிழமை மாலைவேளைக்குள் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்றும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்கள் இன்று முதல் ஆரம்பித்த பகிஸ்கரிப்பினால் ஆங்கில புதுவருட கொள்வனவில் ஈடுபட பல இடங்களில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு வருகை தரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் இன்று காபொ.த சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பிடும் (more…)
தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதை மறைத்து புனர்வாழ்வு பெறாமல் நழுவிய ஆயிரம் முன்னாள் போராளிகளை படைப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.ஏனெனில் இவ்வாறானவர்களே வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. (more…)
யாழ்ப்பாணம் சில்லாலை புனித கதிரை அன்ணை ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.மேற்படி பகுதியில் உள்ள மாத ஆலயத்தின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் உண்டியல் பணம், மாதவின் முடி, றொட்டி, வைன் போன்றவற்றினை களவாடிச் சென்றுள்ளனர். (more…)
நயினாதீவு பிரதேசத்துக்கு மீண்டும் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது காலநிலை வேறுபாட்டால் மின்பிறப்பாக்கிகளுக்குரிய டீசலை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மின் விநியோகத்தில் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
