- Tuesday
- April 7th, 2026
கீரிமலை கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் இன்று பெய்து வரும் அடை மழை காரணமாக பருவ காலத்தினை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகின்றதாகவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் மீனவ சங்கத் தலைவர் மரியதாஸ் பயஸ் லோகதாஸ் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ள நிலையில், விரிவுரைகளில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
தேசிய தைப்பொங்கல் விழாவிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு பற்றுவதற்காக இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். (more…)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மீனவர்கள் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக திருகோணமலை வரையான கடற் பரப்பிற்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
யாழ். மாநகர சபை கீதத்தினை மீள் பதிவு செய்ய யாழ். மாநாகர சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)
அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதைத் தடை செய்யப்படும் இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்தார். (more…)
காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கான புதிய கட்டணத் திருத்தம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.காணி உறுதிப்பத்திர பிரதிகளை பெற்றுக்கொள்ளவதற்கான கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளிடம் கூறியதாக தெரியவருகின்றது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள். (more…)
வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளராக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். அச்சுதன் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார். (more…)
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் (more…)
வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரின் ஜீப் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர். (more…)
புன்னாலைக்கட்டுவன், வடக்குச்சந்தியில் உள்ள தேனீர் கடையொன்றின் மீது இளைஞர் குழு ஒன்று மது போதையில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கடையில் பணிபுரியும் இருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. (more…)
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சுழியில் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளளது. இதில் ஆழியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் துரைசிங்கம் (more…)
யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி நாவாந்துறை பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் தொடர்பிலான கடிதம் ஓஸ்மானியா கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், (more…)
வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது (more…)
நல்லூர் ஆலயச் சுற்றாடலில் படையினரால் காவலரண் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள், இராணுவத்தின் மீது சுமத்தி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு அடிப்படையான காரணகர்த்த நல்லூர் ஆலய நிர்வாகிகளே என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இவர்கள் படையினரை சந்தித்து தமது ஆலயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, படையினர் காவலரண்...
அநுராதபுர இரத்தவங்கியில் கடமையாற்றும் வைத்தியரும் உதயன் நாளிதழின் பத்தி எழுத்தாளருமான வைத்தியர் இரத்னசிங்கம் சிவசங்கர் கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்..கிளிநொச்சியில் புதிதாக இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்த பெண்களின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (more…)
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார். (more…)
இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
