Ad Widget

இனங்களிடையே ஐக்கியம், புரிந்துணர்வு ஏற்பட இசை அடிப்படையாக அமைய வேண்டும்: டக்ளஸ்

daklasசமூகம் மற்றும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான இசை விழா ஒரு அடிப்படையாக அமைய வேண்டும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்று வரும் இசை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் இசை ஒரு அழிவை நோக்கியதான விடயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது இந்த அழிவில் இருந்து தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு நீடித்த அமைதியை ஏற்படுத்தி தந்திருக்கும் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டும்.

சமூகங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் ஒரு கலாசார பரிமாற்றத்தை மட்டுமல்லாது புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமையும் என்பதுடன் எதிர்காலங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்’ என்றார்.

Related Posts