யாழ்ப்பாணத்தின் வடகிழக்கில் 900 கிலோமீற்றர் தூரத்தில் மகாசென் சூறாவளி!

வங்காளவிரிகுடாவில் தோன்றியிருந்த சூறாவளியானது இன்று அதிகாலை 02.00 மணிக்கு எமது திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட அவதானிப்பின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. (more…)

லயன்எயார் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண் உயிருடன் உள்ளார்!

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. (more…)
Ad Widget

வல்வெட்டித்துறை கடலில் காணாமல் போனவர் 2 தினங்களின் பின்னர் சடலமாக மீட்பு

இடிமின்னல் தாக்கி வல்வெட்டித்துறை கடலில் காணாமல் போயிருந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

கோப்பாயில் இளைஞனைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு

கோப்பாயைய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

பிரதேச அபிவிருத்தி வங்கியால் 4 மாதத்தில் மாத்திரம் 1000 பேருக்கு கடனுதவி

யாழ். மாவட்டத்தில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி வங்கி கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் 1000 பேருக்கு சுயதொழில்களுக்கான கடனுதவிகளை வழங்கியுள்ளதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்.கிளை முகாமையாளர் எஸ்.சிவலோகன் தெரிவித்தார். (more…)

பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும்

பெற்றோர்கள் எமது பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

குமுதினி படுகொலையின் நினைவு நாள் இன்று

குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. (more…)

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை விரைவில்

மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமல்லாது புகையிரத சேவை எதிர்காலத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச

வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

சீவல் தொழிலாளி பனை மரத்தில் இருந்து வீழ்ந்து பலி

சீவல் தொழிலாளி ஒருவர் பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இளவாளை உயரப்புலம் பகுதியில் திங்கள் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தினைச் சேர்ந்த (more…)

மகாசேனுக்காக மன்னிப்புக் கோரிய இலங்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு மகாசேன் என்று சூட்டிய பெயரை சிறிலங்கா விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு மகாசேன் என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது. இது மியான்மர் - பங்களாதேஸ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் சிறிலங்காவிலும் காணப்படுகிறது. அங்காங்கே சிறியளவிலான...

முரண்பாடுகளை களைந்து செயற்பட தீர்மானம்: சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளுக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளை கலைந்து செயற்படும் வகையில் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்று (more…)

வல்வெட்டித்துறையில் தொழிலுக்கு சென்ற மீனவர் கடலில் மாயம்

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளார். (more…)

வரணியில் சட்டவிரோத மண் அகழ்வால் மக்கள் சிரமம்

வரணி நாவற்காடு வெங்கி ராயன் வயல்வெளிகள் பெருமளவான பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மண் அகழ்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தமிழ் தேசமிருந்தால் தமிழ்த் தேசிய அவையில் பங்குபற்றுவோம் :-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

"தமிழ்த் தேசிய அவை'யானது தமிழ் தேசத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தால் அதில் பங்குபற்றுவோம், இல்லையெனில் அதில் பங்குபற்றுவதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை" (more…)

புயல் அபாயம் நீங்கியது

யாழ். குடாநாட்டில் புயல் அபாயம் நீங்கிய போதும் மப்பும் மந்தாரமுமான கால நிலையே இன்றும் நீடிக்கும் என யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாணத்தில் தனித்துப் போட்டியிடும்!- செயலாளர் ஹசன் அலி

வட மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டணி சேராது எனவும், தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் (more…)

மினி சூறாவளியினால் சேதமடைந்த வீடுகள் இராணுவத்தால் புனரமைப்பு

மல்லாகம் கோணப்புலம் முகாமில் நேற்றயதினம் காலை திடீரென வீசிய மினி சூறாவளியினால் முழமையாக பாதிக்கப்பட்ட ஐந்து வீடுகளில் நான்கு வீடுகளை இராணுவத்தினரினால் கட்டி மீள வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் 42 குடும்பங்கள் பாதிப்பு:200 வீடுகள் சேதம்

வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. (more…)

கீரிமலை, தையிட்டியில் மீள்குடியேற்றுமாறு வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மயிலிட்டியில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு' வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts