Ad Widget

புதிய விடுதித் தொகுதி கைதடி முதியோர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது

கைதடியில் அமைந்துள்ள சாந்தி நிலைய முதியோர் இல்லத்தில் புதிய விடுதித் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

8849948984_a1359c2572வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி மற்றும் திருமதி ஜி.என்.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு விடுதியை திறந்து வைத்தார்கள். வட மாகாண நமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. இவ் மனநல சிகிச்சை பிரிவின் மூலம் வயோதிபர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இக்கட்டடம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ரூபா 12.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டடத்திறப்பு விழாவினை அடுத்து வெசாக் நிகழ்வினை முன்னிட்டு ஆளுநரும் அவரது பாரியாரும் பரிசில்களையும் பாற்றுசோறினையும் முதியவர்களுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் கைதடி சாந்தி நிலைய முதியோர் இல்ல பாவனைக்கு அம்புலன்ஸ் வண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் அங்குள்ள கட்டடங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். மேலும் வேண்டிய உதவிகளை மேற்கொள்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு. இ.இளங்கோவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

கைதடியிலுள்ள அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்திற்கு விஜயம் செய்த விருந்தினர்கள் அங்குள்ள சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கினார்கள்.

Related Posts