- Friday
- April 24th, 2026
மண்டைதீவு மக்களின் சட்ட நிர்வாக பொறுப்புகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித்தர ஆவண செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், மண்டைதீவு மக்களின் சார்பாக உரையாற்றிய திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் கோரிக்கை விடுத்தார். (more…)
பருத்தித்துறை, முள்ளிவெளிச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கணித பாடத்தில் சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரத்தில் இரண்டு வருடம் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் கட்டாயமாக சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…)
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவென புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலர் எமக்கு பணத்தை அனுப்ப முன்வந்துள்ள போதும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. (more…)
2014 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் படி இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 0.42 வீதமான நிதியே வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)
சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களை அடக்கும் செயல்களையே எப்போதும் அரசாங்கம் செய்கின்றது. வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டதன் மூலம் இது மேலும் பிரதிபலிக்கின்றது." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி. (more…)
ஆசிரியர்களின் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். (more…)
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலு அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில் மாற்றம் அவசியம். (more…)
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். (more…)
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். (more…)
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. (more…)
வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 'கல்வி முறைமை மீளாய்வு' தொடர்பான அறிக்கை, இன்று வியாழக்கிழமை (17) வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வைத்து வெளியிடப்பட்டது. (more…)
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார். (more…)
கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியை கடந்த செவ்வாய்க்கிழமை (15) தொடக்கம் காணவில்லையென யுவதியின் தாயாரினால் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
மலேசியா, குவலாலம்பூர் திருமுருகன் திருவாக்குத் திருபீடம் தவத்திரு சுவாமி பாலயோகி அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் வரவேற்பும் பாரட்டும் (more…)
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கையர்கள், யன்னல்கள் அற்ற இரும்பு அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.த கார்டியன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. (more…)
காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார். (more…)
யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
