அவதானமாக செயற்படுங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது எனவும்...

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த மகிந்தவினால் ஏற்பட்ட பரபரப்பு

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம்...
Ad Widget

விசேட நில அளவையாளர்கள் குழு இரகசியமாக குருந்தூர் மலைக்கு சென்றதா?

கொழும்பில் இருந்து சென்ற விசேட நில அளவையாளர் குழுவொன்று இரகசியமாக குருந்தூர் மலையில் நில அளவை செய்வதாக தகவல் வெளியாகிய நிலையில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் உள்ளிட்டோர் குருந்தூர்மலை அளவீட்டை தடுத்து நிறுத்தும் நோக்கோடு அப்பகுதிக்கு சென்றுள்ளனர். கொழும்பிலிருந்து சென்ற விசேட நில...

கொக்குவிலில் முச்சக்கர வண்டி சாரதி மீது வாள் வெட்டு!

கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு கொக்குவிலில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாயினால்...

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார். மருந்து தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்...

யாழில் போதைப் பொருளுக்கு எதிராக அம்மான் படையணி உதயம்!!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா...

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும்...

எனக்கும் சாணக்கியனுக்கும் மர்ம நபர்களால் உயிர் அச்சுறுத்தல்! – சபையில் சுமந்திரன்

புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களால் தனக்கும், சாணக்கியனுக்கும் உயிர்அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், "நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில்...

13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 73 வயதுடைய வயோதிபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 13 வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த...

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, உலகளாவிய தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல...

புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி!

கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டும் – ஆசிரியர் சங்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகளை வென்றெடுத்த பிரதிநிதிகளின் மாநாட்டில்...

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரச ஊழியர்கள் கோரிக்கை!

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு...

குறைக்கப்பட்டது லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை!

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4 ஆயிரத்து 280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ஆயிரத்து 720 ரூபாவாக காணப்படுகின்றது. மேலும் லிட்ரோ...

மீண்டும் அதிகரிக்கப்பட்டன தொலைபேசி கட்டணங்கள்!

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளன.

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850 ரூபாயில் இருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ பால் மா பெக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும். முன்னதாக ஒரு கிலோ பால் மா...

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில்...

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும்

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி இரத்தைப் போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுங்கள் – ஜனாதிபதியிடம் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல்

அதியுயர் பாதுகாப்பு வலயப்பிரகடன வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ததைப்போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார். 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி கடந்த செப்டெம்பர் மாதம்...
Loading posts...

All posts loaded

No more posts