- Thursday
- August 28th, 2025

எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி,...

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத் திட்டத்திற்கு, தகுதியுடைய மாணவ,...

மருந்து பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா குருமண்காடு சந்தியில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய் என்ற பாதையை தாங்கியிருந்தனர். குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும்...

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. நள்ளிரவு முதல் நடைமுறை இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்...

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்கமானது இன்று (6) தென்கிழக்கு வங்கக்கடலில் தாழமுக்கமாக வலுப்பெற்று இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேலும் படிப்படியாக வலுவடைந்து ஒரு சூறாவளியாக மாறி டிசம்பர் 08 ஆம் திகதிக்குள்...

இலங்கையில் தற்போது நிலவும் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் இலங்கை தாதியர்...

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை தொடர்பில் நேற்று...

கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்...

யாழ் குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல்...

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும்...

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர். இதேவேளை யாழ். நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியிளும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றிருந்தது. இதன்படி வருகின்ற புதன்கிழமை வீடுகளில் திருக்கார்த்திகை திருநாள் இடம்பெற்ற...

திட்டமிடப்பட்டபடி இன்று திங்கட்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்விநியோகம் தடைப்படவுள்ளது. இந்த மின்வெட்டு முறைமைக்கு நேற்று அங்கீகாரம் வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதற்கமைய யாழிற்கு விஜயம் செய்துள்ள இவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டனர். இதேவேளை கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விஐயம்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (05) ஆரம்பமாகின்றது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 2 ஆம் திகதி நிறைவடைந்தது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதற்கட்டம் நடைபெறவுள்ளதோடு, நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும்...

இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும் இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (ரூ.8 லட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக முன்னெக்கப்பட்டது. சர்வதேசத்திடம் நீதி வழங்குமாறு கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வழக்குதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் ந.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்க நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 11 மாதங்களேயான குழந்தை சளி காரணமாக உயிரிழந்துள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை முட்டு இழுத்ததன் காரணமாக பெற்றோரால் காரைநகர் வலந்தலை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை...

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாகவும் அதனால் வீதியை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையிலையே இன்று இப்போராட்டம்...

All posts loaded
No more posts