- Thursday
- August 28th, 2025

தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று முன்தினம் (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர்...

தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் ஊடாக மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தவறான தகவல்களைத்...

வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “அண்மைய நாட்களில் வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத கால்நடைகள் இறந்துள்ளன...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை 10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து மீண்டும் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று (12) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த அபாய நிலை நீங்கியுள்ளதால், இன்று முதல் வழமை போன்று பாடசாலைகளை...

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை...

கணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. உரிமம் பெற்ற 13...

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடத்தில்...

வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்து,சுபோகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வழியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது சாதாரணமாக வளி...

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது. அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுற்றுப்புறக் காற்று தர...

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களும் முறிந்துள்ளன. இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று (08) இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியினை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால்...

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முகக் கவசம் அணியுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மீள் அறிவிப்பு வரும் வரை முகக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தூசித் துகள்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட வளி மாசு பாரியளவில் குறைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய காற்றின் நிலை மற்றும் அதன்...

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய...

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 4,610 ரூபாவாகும். அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை 4,990 ரூபாவாகும். பொருந்தக்கூடிய விலைகளின் முழுப் பட்டியல் கீழே...

வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ளசீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போம் கட்டாயமாக முக கவசம் அணியுமாறுகோரிக்கை...

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர்...

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் போதைப்பொருள் பாவனையால் சிறுவர் இல்லங்களில்...

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை நேற்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர்...

கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லையென்றும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு...

All posts loaded
No more posts