Ad Widget

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது!!

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத ஜனாதிபதி துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, பேச்சின்போது 3ஆம் தரப்பு குறிப்பாக இந்தியாவின் மத்தியஸ்தம், கால வரையறைக்குள் பேசசுவார்த்தையை முடிக்க எதிர்வரும் கலந்துரையாடலில் வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் மத்தியஸ்தம் என்ற கருத்தை அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும் இதுவே தனது எதிர்பார்ப்பு என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Posts