கௌதாரிமுனை மணல் அகழ்வு தடுப்பு

முறையற்ற வகையில் அனுமதி பெறப்பட்டு பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 'பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை...

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் – நிதியமைச்சர்

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார். இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும். எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும். நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம்....
Ad Widget

100 நாட்கள் சவாலானது – பிரதமர்

100 நாட்கள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் சவால்மிக்க நடவடிக்கையில் இரவு பகல் பாராது உழைத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாம் செய்யும் வேலையையே பார்க்க வேண்டும். தவிர, நாட்கள் குறித்து எண்ணிக்கொண்டிருக்க கூடாது என்றும் பிரதமர் கூறினார். தனது உரைக்குப் பின்னர், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், இடைக்கால வரவு - செலவுத் திட்டம்...

இராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய அரசு ஆட்சிப்...

இடைக்கால புதிய பட்ஜட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு :3 மடங்கினால் விலைகள் குறைப்பு

இன்றைய தினம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சறிசேன அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும். ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். இதனையடுத்து நிதியமமைச்சர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவார் பிற்பகல் 1.15...

அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை விலையில் தொலைக்காட்சி!

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனம் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட சலுகை விலையில் தவணை அடிப்படையில் செலுத்தும் வகையில் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்க முன்வந்துள்ளது. வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனம், சர்வதேச தரத்துக்கேற்ப இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள STC General LED என்ற தொலைக்காட்சிகளை நாடுமுழுவதிலுமுள்ள அதன் காடசியறைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என பொது முகாமையாளர் பெரகும்...

வடக்கில் இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி!!!

வடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஔிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதல்வரைச் சந்தித்தார்!

மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோறே ஸ்வைர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். யாழ்பாணம் வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்குச் சென்று முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் இங்குள்ள நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் இலங்கைக்கான பிரிட்டன் தூதர் ஜோன்ரன்கினும் கூட...

முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவ தலையீட்டை அகற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதன்கிழமை (28) கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 'சிவில் பாதுகாப்பு பிரிவிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல்' என்னும் தலைப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கை நாட்டின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை பெற்ற பெண்

வட மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்பட்ட உழவர் திருநாள் போட்டியில், வட மாகாணத்தில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை இராமன் சுதர்சினி என்ற பெண் பெற்றுக்கொண்டார். யுத்தத்தில் கணவனை இழந்த இவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் அம்பாள்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார். இவரது கோழிப்பண்ணையை நாளடைவில்...

புதிதாக ஆயிரம் கிராம சேவகர்கள் இணைக்கப்படவுள்ளனர்

நேர்முக பரீட்சைக்குத் தோற்றிய ஆயிரம் கிராம சேவைகள் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் சித்திபெற்று, நேர்முக பரீட்சைக்குத் தோற்றியவர்கள் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா கூறினார். மேலும் நாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் தமது பணிகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு தற்போது...

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நேற்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்!

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனையடுத்து அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி.பஸ்நாயக்க, பாதுகாப்புப் படை அதிகாரிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொணடனர்.

பொருளாதார அமைச்சின் 16,700 பேருக்கு வேறு சேவைத் துறைகள் அல்லது இடமாற்றம்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் 16 ஆயிரத்து 700 பேரை வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க அல்லது இடமாற்றம் வழங்க நடவடக்கை எடுக்கப்படுகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ச டி சில்வா தெரவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: பட்டதாரிகளான இவர்கள் மாதாந்தம் 28 ஆயிரம்...

இலங்கை அரசின் நம்பிக்கையான நடவடிககைகளுக்குப் பின்னரே அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும்!

இலங்கை அரசு உறுதியான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்றுப் புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை தாயகம் அனுப்பி வைப்பதற்கான...

ஐ.நா. அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது – சுரேஸ்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் இது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இல்லாமல் செய்யும் முயற்சியாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து...

பட்ஜெட்டில் 3 மடங்குகளினால் விலைகள் குறையும்

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய...

வடக்கு , கிழக்கில் மீள்குடியேற்றத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் – த.தே.கூ

வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் அரசு முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில்...

சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை!

வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை இன்றைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில்...

”உண்மை என்றேனும் ஒரு நாள் வெல்லும்” – மஹிந்த

தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். தனது தங்­காலை - கால்ட்டன் இல்­லத்தில் இருந்­த­வாறு தன் மீதான குற்றச் சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் முகமாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார். ஒரு போதும் இல்­லா­த­வாறு தனக்கும் தனது...

தூய நீருக்கான செயலணி உருவாக்கம்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூயநீர் வழங்குவதற்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார...
Loading posts...

All posts loaded

No more posts