நேர்முக பரீட்சைக்குத் தோற்றிய ஆயிரம் கிராம சேவைகள் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.
கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் சித்திபெற்று, நேர்முக பரீட்சைக்குத் தோற்றியவர்கள் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா கூறினார்.
மேலும் நாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் தமது பணிகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு தற்போது பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை.
அந்த சூழ்நிலையை மிக விரைவில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.