- Wednesday
- August 19th, 2026
வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் 'ஹலோ ட்ரஸ்ட்' (HALO Trust) மற்றும் 'மக்' (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (22) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை...
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும். அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, யாழ். குடாநாட்டின் பல்வேறு...
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார். [caption id="attachment_127007" align="aligncenter" width="612"] shot from a handgun with fire and smoke[/caption] இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ...
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன்,...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றும் (21) ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றில்...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தனது இறுதித் தீர்மானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதால்,...
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் ஜூன் 19, 2026 அன்று நிகழ்ந்துள்ளது யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் (குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்), நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கும் அகில இலங்கை தமிழ்க்...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட பெண் வைத்தியர் டாக்டர் கிருசாந்திக்கு எதிராக, எவ்வித ஆதாரமும் இன்றி அர்ச்சுனா பரப்பிய அவதூறு வீடியோக்கள் அனைத்தையும் இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எவருக்கும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க பேச்சு சுதந்திரம் கிடையாது என...
செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள், நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி ஒரு வருடமாகின்ற போதும் அவை இன்னமும் அனுப்பப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின்...
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் காங்கேசன்துறையில் இருந்து புதன் கிழமை நாகைபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில்...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய சந்தேக நபர் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர பிணைகளில் விடுவித்த நீதிமன்றம் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16) பி. ப. 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16.06.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும்...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில்...
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மொத்தம் சுமார் 17 மில்லியன் பேர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36...
வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில்...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 341 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நேற்று 07 என்புக் கூடுகள்...
தற்போது அபாயகரமான நிலையை நோக்கி தீவிரமடைந்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று...
Loading posts...
All posts loaded
No more posts
