யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

யாழில் வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே இரவு 09. 30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று கறுப்புத் துணியால் முகங்களை மறைத்தவாறு இரண்டு மோட்டார்...

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞனின் சடலம்! அளவுக்கதிகமான போதையால் உயிரிழப்பு??

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில்...
Ad Widget

யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு வலைவீசும் பொலிஸார் !!

யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கடந்த 08 ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர். அதனை அடுத்து யாழ்.மாவட்ட...

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம்

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சென்று சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும்...

யாழ். பல்கலைக்கழகத்தின் 37வது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, இன்று (19) ஆரம்பமாகி தொடர்ந்து 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப்...

தமிழ் மக்களுக்கு மீண்டும் துரோகமிழைத்திருக்கிறது தமிழரசுக்கட்சி – கஜேந்திரகுமார்

இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிப்படையாகக்கூறாமல், மறைமுகமாக அதனை வலியுறுத்தியிருப்பதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன் போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கோதுமை மா விலைகளில் மாற்றம்!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

மாணவியைத் தாக்கியமைக்கு இதுவே காரணம்: நீதிமன்றத்தில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்றில்...

குருந்தூர்மலை விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர்...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான செய்தி!!

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்

நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தந ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக...

யாழில் சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை!!

நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கை, முகம் எனப் பல இடங்களிலும்...

அச்சுவேலியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்!!

அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய...

யாழில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் நிகழ்வு

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை...

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய...

யாழ் – சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து விமானம் 11.30 மணியளவில்...

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண...

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ் தேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 2800...

வீடியோ கேம்களில் ஈடுபாடு : தவறான முடிவெடுத்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னை பகுதியை சேர்ந்த புஸ்பராஜா எழில்காந்த் (வயது 22) எனும் மாணவனே உயிர் மாய்த்துள்ளான். தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை யாரும் இல்லாத வேளை உயிரை மாய்த்துள்ளதாகவும், குறித்த இளைஞன் தனிமையை அதிகம் நாடி, வீடியோ கேம்களில்...
Loading posts...

All posts loaded

No more posts