- Sunday
- April 12th, 2026
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவிருந்த கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தது. அவர்களை வழிமறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி என்றும் இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க...
குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் உயிரிழந்த தன் குழந்தையின் சடலத்துடன் தாயார் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்ட போது ,அவர் நோயாளர் காவு வண்டியில் சடலத்துடன் நீண்ட நேரம் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தொடர்பில் தான் ஊடகங்கள்...
கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர்...
யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) சடலமாக மீட்கப்பட்ட விடயம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட...
வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த கும்பலுக்கு அவசியமான பிரபல குண்டர் ஒருவரையே தேடி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கும்பல் அந்த பிறந்த நாள் வீட்டிற்கு வந்த போது, அவர்கள்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை...
பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பச்சை குத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 140 மட்டுமே சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று...
வவுனியாவில் பெண் ஒருவர் உயிாிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. நேற்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 119...
ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து...
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை வழங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் அறியமுடிகிறது. வட்டுக்கோட்டை முதலி...
நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த வடிவேல் ஆனந்தகுமார் (வயது 23) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல்(23.07.2023) ஒரு மணியளவில்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று(24.07.2023) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல்...
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது....
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் நேற்றுமாலை தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது. இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு...
குருந்தூர் மலையில் வன்முறையை தூண்டியதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர்...
வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உறுதியளித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை...
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை, 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்...
அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கு மாகாணத்தில் நரம்பியல்...
இங்கிலாந்தை சேர்ந்த நூலாசிரியர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாண பொதுநூலகத்தின் வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலினதும், ‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா நேற்றைய தினம் யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு ஏராளமானோர்...
Loading posts...
All posts loaded
No more posts
