- Saturday
- June 13th, 2026
நாட்டின் வட,வடமத்திய, கிழக்கு ஊவா மாகாணங்களில் இன்று (25) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது என அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால்...
கனடாவின் ரொரன்டோவிலுள்ள முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றான கந்தசாமி ஆலயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய...
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பயனாளிகள் அதிகாரிகளின் முறைக்கேடுகளுக்கும், உதாசீனங்களுக்கும் ஆளாகிவருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.எனவே, இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 சிங்களவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இவர்களுக்கு பாகுபாடின்றி அரச சேவை வழங்கப்படுகின்றது என்றும் கூறிய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல...
நாம் ஏனையவர்களின் கைகளை எதிர்ப்பதை விட எமக்கான செல்வத்தை அள்ளித்தரக்கூடிய பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் வருவாயைப் பெற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள இத்தாவில் ஆயுர்வேத வைத்தியசலை மற்றும் உப அலுவலகத்தின் திறப்பு விழா, நேற்று திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்ற போது, அதில்...
யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இணையத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் சொர்ணாம்பிகை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் எதிர்கால முன்நோக்கிய நகர்வு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் அரசசார்பற்ற...
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஒரே பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றும் கிராம சேவகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றும் கிராம சேவகர்களில் பலர் 2016ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்ற அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். ஆரம்பகட்ட பணிகள்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புகள் மீதான தடையை நீக்கியமை போன்ற காரணிகளால் வடக்கு கிழக்கில் புலிக்கொடி ஏற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹக்மன லொல்பே ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ‘தமிழீழ விடுதலைப்...
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விடுதலை புலிகளின் புகழ்பாடும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகளில் மறவர் படையின் புனித நாள், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம், மாவீரர் நாள் விளக்கு எரியும் போன்ற விடுதலை புலிகளின் புகழ்பாடும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
யாழ் மாவட்டத்தில் வளலாய், வசாவிளான், தெல்லிப்பளை பிரதேசங்களில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சால் மறுவயற்பயிர் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும், மறுவயற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடனும் நிலக்கடலை, பயறு, உழுந்து ஆகிய மறுவயற்பயிர் விதைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. நேற்று திங்கட்கிழமை (23.11.2015)...
திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பாக 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின்...
நாங்கள் குற்றம் செய்யவில்லை. எங்களை விடுதலை செய்யுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றுஞ திங்கட்கிழமை (23) மன்றாட்டமாகக் கேட்டக்கொண்டனர். கொலை செய்தீர்கள் என்பதற்கு அப்பால், கொலையுடன் தொடர்புபட்டுள்ளீர்களா என்ற ரீதியிலும் விசாரணைகள் இடம்பெறும் என நீதவான் செல்வநாயகம் லெனிக்குமார் இதன்போது கூறினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
மாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் குறித்து பெற்றோர் வீடுகளில் இருந்தவாறே அறிந்துகொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் முறையொன்றை கொக்குவில் இந்துக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு மாணவர் சார்பாக பதிவு பெயர் மற்றும் கடவுச்சொல் என்பன வழங்கப்படும். அதனைக் கொண்டு, பாடசாலையின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் பிள்ளை அன்றைய தினம் பாடசாலைக்கு சென்றுள்ளாரா? என்பதை...
இந்திய மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்திய கடலோரபாதுகாப்பு குழுமத்தின் கடலோர பொலிஸ், வழக்குத்தாக்கல் செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் ஆழ்கடலில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியன்று மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை...
ராகம ரயில் நிலையத்தில் வைத்து ரயில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. ராகம ரயில் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாகவே இந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித்...
கனடாவில் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியை சேர்ந்த கைலாயபிள்ளை குடும்பத்தினரால் தமது குடும்ப அங்கத்தவர்கள் நினைவாக வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் மயில்வாகனம் விமலாதரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிகழ்வில் பாடசாலையின் உபஅதிபர்,...
வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகததுக்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். யாழ். ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள், கழிவுகள்...
Loading posts...
All posts loaded
No more posts
