- Wednesday
- January 14th, 2026
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...
தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று...
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றி, வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஒருவர் தனக்கு மீண்டும் பொலிஸ் வேலை வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் யாழ் கச்சேரிக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். அச்சுவேலியை சேர்ந்த பிரதீபன் என்பவரே தனக்கு பொலிஸ் நிலையத்தில் வேலைவேண்டும் என போராட்டத்தில்...
கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற...
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச்...
தன் மகள் சந்தோசமா வாழுகிறாள் அவளின் வாழ்க்கை சீரழிய கூடாது. எனக்கு எந்த விதமான நஷ்ட ஈடுகளும் தேவையில்லை. என் மகள் சந்தோசமா வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவரின் தாயார் யாழ்.மேல் நீதிமன்றில் மன்றாட்டமாக கோரினார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான...
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில்...
புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர்...
கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி இந்துக் கல்லூரியின்...
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு காவல்துறை அதிகாரிகளும் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததும் பழைய பகை இருவருக்கிடையில் வாய்த் தர்க்கமாக மாறி கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதனை அவதானித்த குறித்த விடுதி உரிமையாளர் இருவரையும் காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண...
வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக...
கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (வயது 11) என்ற இந்த மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளைக்...
தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி ரி.கருணாகரன் நேற்று வியாழக்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , திருட்டு குற்றம் ஒன்று தொடர்பில் சுன்னாகம் பொலிசாரினால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த, மாணவி இந்த விவகாரம் தொடர்பில் தன்னுடைய உறவினர்களிடம்...
கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும்...
மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. மேலும் எங்களிடமும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே இதற்கு ஒரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...
திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில்...
அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், பிரபல கியா கார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கியா ஆப்டிமா’ காரை...
பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே...
Loading posts...
All posts loaded
No more posts
