விநாயகர் பெருங்கதை விரதம் இன்று ஆரம்பமாகிறது!

உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (26) முதல் ஆரம்பமாகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும்...

யாழ் நகரில் நாக விகாரையில் ”கட்டின” பூஜையும் பெரகரவும்!

Ad Widget

நயினாதீவில் பழைய விகாரை இருந்த இடத்தில் மீண்டும் விகாரை

நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும்...

தீபாவளி கொண்டாட்டத்தை இந்துக்கள் புறக்கணிப்பர்! – இந்து மாமன்றம் எச்சரிக்கை!!

தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த...

யாழ். ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமனம்

யாழ். மறை மாவட்டத்தின் 8 ஆவது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து இந்த அறிவிப்பை இளைப்பாறிச் செல்லும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தனது குருத்துவ வாழ்வில் 25...

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

இந்துக்கள் சக்தியை போற்றி வணங்கும் புனித விரதமான நவராத்திரி விரதம் இன்று (13) ஆரம்பமாகிறது. புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்​கை அம்மனுக்கும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லஷ்மி அம்மனுக்கும்...

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று!

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று காலை 08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி நடைபெற்று அதன் பின்னர் சுவாமி காலை 10 மணியளவில் தேருக்கு எழுந்தருளவுள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமியின் தேர் ஆரோகணம் காலை 10. 30 மணிக்கு...

யாழில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

யாழ் முற்றவெளி அரங்கில் காலையில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் தமது ஹஜ் பெருநாளின் விசேட தொழுகையை மேற்கொண்டதுடன் தமது உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா். ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டியும் பிரார்த்திக் கொண்டனா். ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை...

புரட்டாசி சனி விரதம் இன்று ஆரம்பம்

மன்மத வருடத்தின் புரட்டாசி சனி விரதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 5 சனிக்கிழமைகளுக்கு விரதம் நிகழவுள்ளது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இவ்விரதத்தில் ஜாதகத்தில் சனி பகவான் கூடாத இடங்களில் தங்கியிருக்கப் பெற்றவர்கள் இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து, எள்ளெரித்து, நீலப்பட்டாடை சாத்தி, நீல நிறப் பூவால் அர்ச்சனை செய்து விமோசனம் பெற்றுக்கொள்ளலாம்.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தளர்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு...

நல்லூர் திருவிழா : யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர் தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம்...

ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் இன்று!

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா 25 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையும் தேர்த்திருவிழா 26 ஆம் திகதி சனிக்கிழமையும், சமுத்திரத் தீர்த்திருவிழா 27...

நல்லூர்க் கந்தன் இரதோற்சவ பெருவிழா

நல்லைக் கந்தன் என்று அழைக்கப்படும் நல்லூர் முருகனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 7மணிக்கு இடம்பெற்றது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன. ஆலயத்தின் திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும் என்பதனால் ஆலயச் சூழலில் பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில்...

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அதற்கான முன் அனுமதி பெற்று அதனைச் செயற்படுத்த முடியுமென வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணிக்கு நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய...

யாழ். நல்லூர் தேர், தீர்த்தத்தின் போது குற்றங்கள் புரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை! நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின்போது, கலாசாரச் சீரழிவு குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்...

33 வருடங்களுக்குப் பின்னர் முல்லை குருந்தூர் மலை ஆலயத்தில் வழிபாடு

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப்பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.08.2015) வழிபாடு இடம்பெற்றுள்ளது. ஊரவர்களால் 'ஜயன்' என்று அழைக்கப்படும் இந்த வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட மடைப்பொங்கல் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரும்...

நல்லூரானின் அதிசயம் !! திருட்டுப்போன ஓட்டோ திரும்ப வந்தது!!

நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வருகை தந்து ஆலயப் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்தது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.8.2015) அதே இடத்தில் கொண்டு...

நல்லூர் உற்சவம்: 300 கடைகள் அமைக்க அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான...

நல்லூர் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 19 ஆம்திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன், ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கந்தன் ஆலய வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்துணிகள் கட்டப்பட்டுள்ளன. இம்முறை ஆலய சூழலில் நடைபாதை வியாபாரங்கள் முற்றாக...

நல்லூர் கந்தன் திருவழா ஏற்பாடுகள் சூடுபிடிப்பு

எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்துக்குள் நுழையும் நாற்பக்க வீதிகளிலும் பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தில் சுவாமி வீதியுலா வருகையில் விளம்பரப் பதாகைகள் பார்வைக்குத் தென்படாத வகையில் ஆலய வெளிவீதி வளாகத்தைச் சுற்றி ஆலய நிர்வாகத்தால் மறைப்புக்...
Loading posts...

All posts loaded

No more posts