- Monday
- December 22nd, 2025
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை...
இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோவிட் -19 நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நிலையில் முதலாவது கோவிட்...
கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவு பெண் பயணித்த யாழ்.பருத்துறை இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. குறித்த நடத்துனருக்கு நடத்தப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி தகவலை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார் அத்தோடு புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு...
நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 58 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய மூவர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,...
தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும்...
நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தனி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் 15, 20...
யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போதைய கொரோனா நிலைவரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும்கூட அபாயமான...
கோவிட் -19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வடக்கு மாகாணத்தில் சிறப்பு வைத்தியசாலையை அமைக்க இராணுவம் தயாராக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிறப்பு வைத்தியசாலையை தயார்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கோவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700 பேரை...
முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின்...
அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினர் மறு...
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. நேற்று மாத்திரம் 19 கொரோனா தொற்றாளர்கள் குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 18 பேருக்குமே இவ்வாறு கொரோனா...
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார் , எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தற்போது இனங்காணப்படும் நோயாளர்களில் வைரஸின்...
ஹம்பகா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் கொழும்பிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தொற்றுக்குள்ளான 10 போில் 9 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்கள் யாழ்ப்பாணம்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்தார், அவரை இராணுவம் கொல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (6) நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அகில இலங்கை தமிழ்...
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு...
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி,...
கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரையில் பயணித்த இ.போ.ச பேருந்தில் பயணித்த ஒரு சிலரே தம்மை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் ஏனையவர்களும் தம்மை அடையாளப்படுத்துமாறு மாகண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கேட்டுள்ளதாவது, புத்தளத்திலிருந்து - கொடிகாமம் வந்து பின்னர் பருத்துறைக்கு...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் தொடர்பை பேணிய மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts
