- Tuesday
- December 16th, 2025
அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65...
வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப்...
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு!
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து...
நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது....
எதிர்காலத்தில் 15 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல்வாதிகள் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் எனத் தெரியவில்லை அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நாளை...
மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம்...
பாண் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி பொருள்களின் விலைகளில் மாற்றமில்லை. என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்க செயலர்,க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான நடத்தப்பட்டது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களும் சுடர் ஏற்றி அஞ்சலித்தனர். தமிழ் மக்கள் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக...
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு மற்றொரு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றையதினம்(திங்கட்கிழமை) ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை...
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு...
ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி...
அரசியல் உறுதித்தன்மையை உடனடியாகக் கொண்டுவருமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இப்போது அது நடக்கவில்லை என்றால், மக்கள் தினமும் 10-12 மணிநேர மின்தடை, அதிக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய தட்டுப்பாட்டை அடுத்த வாரம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார். “இந்த நேரத்தில் எந்த இறக்குமதி பொருள்களிலும் பணத்தை...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர். வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாக சேவைகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் நாடு அராஜகமாகி விடுவதைத் தடுக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு...
மேற்கு மத்திய மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்வதாகவும் நாளைய தினம் சூறாவளியாக வலுவிழக்க கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 90 கி.மீ...
மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க...
Loading posts...
All posts loaded
No more posts
