- Thursday
- September 17th, 2026
2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர்...
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல்...
நிலவும் சீரற்றவானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது....
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு...
எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை தேசிய அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, தற்போது 200 இலங்கை மாணவர்கள் STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிர பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேர்வுச் செயல்பாட்டின் அடிப்படையில், 18...
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை இணையவழியில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, www.doenets.lk...
இலங்கையில் சட்டத்துறைக்கு சட்டத்தரணிகளை உருவாக்கி வரும் 152 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமைமிக்க இலங்கை சட்டக் கல்லூரி, நவீன சட்டக் கல்வியை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS), மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) மற்றும் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின்...
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (20) வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை...
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் நேற்றைய தினம் 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க...
தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026: பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி அறிவிப்பு! தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026 இன் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்டக் கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திலீபன் ஆவணக்காப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்துத்...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பமான விண்ணப்பக் கோரல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில்,...
நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் டெங்கு பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...
சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பல்வேறு விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை காட்டுகிறார்கள். இத்தகைய உணவுப் பொருட்களில் போதைப்பொருட்களையோ...
2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்...
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் (ATI - Jaffna) 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணக்கியல் (HNDA), முகாமைத்துவம் (HNDM), ஆங்கிலம் (HNDE), தகவல் தொழில்நுட்பம் (HNDIT) மற்றும் பொறியியல் சார்ந்த (Civil, Electrical, Quantity Surveying) உயர்...
போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே...
பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அரசாங்கம்...
இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்தார். சாதாரண தரப் பரீட்சையை...
Loading posts...
All posts loaded
No more posts
