இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை கொடிகாமத்தில் ஆரம்பம்!!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில்,...

சிகரம் கல்வி தொழில் விசா சேவை யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் ஆரம்பமானது!

15 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி, தொழில், விசா சேவை அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனத்தின் செயற்பாடுகள், யாழ் நகர மத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், முன்னாள் நெல்லியடி மகாவித்தியாலய அதிபர் கலாநிதி சேதுராஜா, யாழ்...
Ad Widget

2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தர (Advanced Level Vocational Stream) – தரம் 12 சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தரப் பிரிவு (Advanced Level Vocational Stream) தரம் 12 இற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளது. 2025 (2026) ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றிய எந்த மாணவரும், தமது பிரதேசத்தில்...

தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் நியமனம்!!

தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் அவர்கள் நேற்றைய தினம் (24.06.2026) புதன்கிழமை கடமைகளை தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று தீவக வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை கடந்த (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16...

2027 முதல் தரம் 1 மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றறிக்கை – அமைச்சரவை ஒப்புதல்

பாடசாலைகளில் தரம் 1 மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் புதிய சுற்றறிக்கையை 2027 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கல்வியில் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய வடிவமைப்பு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு,...

2026 உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும்!!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தனது இறுதித் தீர்மானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதால்,...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!!

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம் இன்றி பரீட்சை விண்ணப்பம் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2026 டிசம்பரில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு எப்போது வௌியாகும்?

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை முடிவுகள்...

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல்!! பாடசாலைகளுக்கு விடுமுறை!!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா...

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக சேர்க்கை கையேட்டை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதன்...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் (www.doenets.lk) மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...

A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர்!!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள் தித்வா...

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட ஆலோசனைகள்!!

நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். இன்றைய இரவில் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பதில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என்றும், மத வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை...

வடக்கு கல்வியில் முறைகேடு? ஆசிரியர் சங்கம் போர்க்கொடி!

கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்று அனுப்பி...

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!!

டித்வா புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஜனவரி 20 வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும் 32 பிரதேச மையங்களும்...

2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை, 2025 டிசம்பர்...
Loading posts...

All posts loaded

No more posts