- Sunday
- February 8th, 2026
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி...
2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவனான தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் அதேபோன்று , விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார் கொரோனா...
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சற்று முன்னர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 வைரஸ் பரவுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் விரைவில் மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியாசிரி பெர்னாண்டோ, தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மூடப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.
பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பிரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைகழகங்கள் மீள ஆரம்பிப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் பல்கலைகழக ஆரம்பம் மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். “விடுதிகளை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் தொடக்கத்தில் 4 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல்...
ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 30ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்றனர். மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில்...
கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறைத் தலைவர் சுவாமிநாதன் விமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிரதான பாடங்களில் ஒன்றாக மாணவர்கள் தெரிவு...
மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் , ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையை அடுத்தே பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் எதிர்வரும் 19ஆம் திகதியே...
வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் நிறைவு செய்யப்பட்டிருக்காவிட்டால் பரீட்சைகளை தாமதமாகலாம். எனினும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான இறுதி தீர்மானம் இது வரை எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வீரகேசரிக்கு தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள...
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது...
திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இதுவரை...
2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக இம்முறை விசேட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை https://www.doenets.lk/ என்ற திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
