- Tuesday
- September 15th, 2026
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட 6 ஆவது சந்தேக நபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். அத்துடன், சந்தேக நபர்கள் ஐவரின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிப்பதாகவும் நீதவான் கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகத்தில்,...
யாழ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்றையதினம் இடம் பெற்ற குழு மோதலில் பொலிஸார் மற்றும் காவலாளி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரில் உள்ள திரையரங்குக்கு நேற்றைய தினம் 3 பேர் அடங்கிய குழுவினர் திரைப்படம் பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது திரைப்படம் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் பெறுவதற்கு வந்தவேளை, திரைப்படம் ஆரம்பித்து விட்டதாகவும்...
அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் கணவன் மனைவி மீது அசிட் தாக்குதல் நடாத்த முயற்சித்தவேளையில் மனைவி அசிட் போத்தலைப்...
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாகை அருகே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் இந்த 10 மீனவர்களையும் கைதுசெய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களுள் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள்...
பிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பை சேர்ந்த தந்தையும் மகளும் நேற்று (புதன்கிழமை) மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 4, ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து...
அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லுத்தினர் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார். அண்மையில், கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தமிழக மீனவர்...
தனியார் துறை ஊழியருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாவை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில்திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த சம்பள அதிகரிப்பு தொகையை சில நிறுவனங்கள் வழங்காதமை தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொழிலாளர் உரிமையை மீறும் பாரிய குற்றமாகும்...
யாழ்குடாநாட்டின் கொம்படி பகுதியில் விமானப்படை விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிகாரி ஒருவர் உட்பட 4 விமனாப்படையினரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரியை செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்றது. விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின்...
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (06) தீர்ப்பளித்தார். அபராதத் தொகையான 10ஆயிரம் ரூபாயைச் செலுத்த தவறின்...
கிளிநொச்சி, சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை,...
2006 ம் ஆண்டில் பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 11 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக...
நெடுந்தீவு மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து இரண்டு றோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.
வேலணை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அலைபேசி மீள் நிரப்பு அட்டையினை வாங்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகக்கூறி மிகுதி பணத்தினை தருமாறு வர்த்தகரை அச்சுறுத்திய இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வேலணை பகுதியில் உள்ள கடைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆயிரம்...
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதவான் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த 15 மாணவர்களும் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். பின்னர் அவர்களை இன்று வரை (2ம் திகதி) விளக்கமறியலில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களில் ஒருவர் தனக்கு தெரிந்த பல்கலைகழகம் சாராத வேறு சிலரை தமக்கு சார்பாக அழைத்துவந்துள்ளார். இதன்படி நேற்றையதினம் மாலை குறித்த பல்கலைகழக மாணவன் மது...
Loading posts...
All posts loaded
No more posts
