Ad Widget

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமும் கையளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரில் 4 பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சார்பில் 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேற்படி வழக்கு, எதிர்வரும் மே 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Related Posts