- Tuesday
- September 15th, 2026
நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முறையீடு செய்துள்ளனர். அத்தோடு குறித்த ஏழு குற்றவாளிகள் சார்பிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல அதிகாரி ஒருவர் நிதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி நேற்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். கிளிநொச்சி – மகாதேவா...
யாழில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட...
2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக, இலங்கை கடற்படையினர் போலியான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம்...
வவுனியாவில் ஆசிரியருக்கெதிராக துண்டுப்பிரசுரம் மூலம் பரப்புரை செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியாவிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் சாந்தசோலை, தாண்டிக்குளம் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுடைய இரு மாணவர்கள் அப் பாடசாலை ஆசிரியரை தகாத வார்த்தைகள் மற்றும் சித்தரிக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து வவுனியா நகர் முழுவதும் நேற்று...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டுக்குள் பாரியளவில் ஆயுத உற்பத்தி இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (03) ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது...
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் போல் சென்ற பொலிஸார், இவர்களை நேற்று (திங்கட்கிழமை) மாலை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் பெண்கள் இருவரும்...
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனையானது வரலாற்று ரீதியில் மதிக்கப்பட வேண்டிய ஓர் தீர்ப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புங்குடுதீவு மாணவி...
கொக்குவிலில்நேற்று இரவு கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (01) இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 9 பேர் கொண்ட குழுவே தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் குறித்த 7 கைதிகளையும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் சென்றுள்ளனர். தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி குறித்த 7 குற்றவாளிகளும் போகம்பர சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றுள்ளனர். வித்தியா...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்ட விதத்தை நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இக் குற்றத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இச் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதென நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சுவிஸ்குமாரை தப்பிக்க வைப்பதற்கு...
வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார். புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை மற்றும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (25) காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிறியதந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளன...
கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேரி கம்சிகா கொலை வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இ.சபேஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரியும், சந்தேக நபர்களிடம் இருந்து...
வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய...
Loading posts...
All posts loaded
No more posts
