- Tuesday
- September 15th, 2026
மானிப்பாயில் வயோதிபப் பெண் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்தே அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்ணே கொலை...
மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது. நீலாதேவி (வயது -69) என்ற பெண்ணே உயிரிழந்து குருதி வெள்ளத்தில் மீட்கப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த மாணவனொருவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளான். சிறுமிக்கு பிஸ்கட்...
சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. “சுழிபுரம் மத்தியில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் இந்த கசிப்பு உற்பத்தியிடம் முற்றுகையிடப்பட்டது. 27 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது. கசிப்பை உற்பத்தி வந்தவர் என சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். நிலத்திலிருந்து...
மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் இன்று காலை புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல், வாள்வெட்டு என பெரும் அட்மூழியத்தில் ஈடுபட்டு தப்பித்துள்ளது. வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும். “10 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வந்தது. வீட்டுக்குள் புகுந்த கும்பல்,...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு மீதான சுருக்க முறையற்ற விசாரணை...
“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்...
“சுழிபுரம் பாணவெட்டை பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி துன்புறுத்தல்களின் பின் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உடலில் உள்ள அடையாளங்களை வைத்து நம்பப்படுகிறது. எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும்” இவ்வாறு தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார்...
முல்லைத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த புலிக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோது, வைத்தியசாலை வளாகத்தில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த இவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது...
கொக்குவில் தாவடி தெற்குப் பகுதியில் குடும்பத் தலைவர் ஒருவர், கும்பல் ஒன்றால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளானவரே இந்த முறைப்பாட்டை வழங்கியதுடன், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. “தாக்குதலுக்குள்ளான குடும்பத்தலைவரின் சகோதரியின் மகளை இளைஞர் ஒருவர் காதலிப்பதாக பிரச்சினை எழுந்தது....
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஜயசூரிய (வயது -26) மற்றும் சண் ருவான் (வயது – 26) ஆகிய இளைஞர்களே கத்திக் குத்துக்கு...
கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில 23,26,22 மற்றும் 24 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில்...
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர், மதுபோதையில் பெண் பயணி ஒருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டில் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாங்குளத்தில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் பெண் பயணி முறைப்பாடு வழங்க மறுத்ததால், பேருந்து நடத்துனர், இராணுவச் சிப்பாயை இறக்கிவிட்டு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ...
கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றதுடன், மேற்கொண்ட விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை,...
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமே கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சிறுத்தையை உயிரிடன் மீட்கும் தமது பணிக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடையூறு விளைவித்தனர் எனவும் அரியவகை வன விலங்கை சித்திரவதைக்குட்படுத்தி சிலர் அடித்துக் கொண்டனர் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவ புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கி 4 நாள்களுக்குள் கிளைமோர் குண்டு மற்றும் அதனை மறைந்திருந்து இயக்கும் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று...
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஏனைய இருவரும் தப்பி சென்றனர். இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும்...
யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குணரட்ணம் விஜிதா (வயது...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள்...
மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றபோது, தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40...
Loading posts...
All posts loaded
No more posts
