யாழில் முஸ்லிம் இளைஞன் உட்பட மூவர் கைது! தொடரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நாடடைச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு...

தாக்குதல் நடத்தியோர் பயணித்த வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதியும் கைது

கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிசிரிவி காணொலிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வான் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இதேவேளை, தாக்குதல்களுக்கு காரணமான குழுவின் பெயரை...
Ad Widget

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

மாதகல்லில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம்?

மாதகல் பகுதியில் காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கஞ்சா போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற போதிலும் , தம்மால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறை தரப்பு அடியோடு மறுத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளவாலை காவல்துறைப்...

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் – 3 வீடுகளில் தாக்குதல்

மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் இடம்பெற்றது என பொலிஸார் கூறினர். மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன்...

கை குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பயன்பாடற்ற காணி ஒன்றிலிருந்தே...

யாழ். நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து பின் வாயிலூடாக தப்பித்து ஓடியுள்ளார். யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந்த என்ற சந்தேகநபரே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ்...

கிளிநொச்சி உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத்தண்டணை!!

கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது....

07 போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதம்!!

போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, 1) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். 2) மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல். 3) தொடருந்து வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல். 4) செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்....

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட சிறுவன் உள்ளடங்கலாக 26 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய...

சங்கத்தானையில் அட்டகாசம் – இருவரை காவற்துறையினர் துரத்திப் பிடித்தனர்

வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர்...

திறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்!!!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்த உப பொலிஸ்...

கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத்...

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...

பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடக்கைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் புத்தளத்தில் கைது!!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்லவிருந்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸார் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

மதுபோதையில் கொலை செய்த நபர் கைது!!!

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது இதில் கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே உயிரிழந்துள்ளார் விநாயகபுரம் ஒன்பதாம் குறிச்சி வீதியில் மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை...

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த...

பிரமிட் வர்த்தக முறைமை: யாழில் திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை!

மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது....

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது...

கீரிமலையில் வாளுடன் நடமாடிய இளைஞர் கைது!

கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞரொருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயதுடைய இளைஞனையே பொலிஸார் கைது செய்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், இளைஞரொருவர் வாளுடன் நடமாடுவதாக அப்பகுதி மக்கள், காங்கேசன்துறை பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
Loading posts...

All posts loaded

No more posts