21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை ! ரூ.47,000 தண்டம் வசூல்

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த 24 வர்த்தகர்களுக்கு 47,500 ரூபா தண்டப்பணம், யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார். Read more »

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். Read more »

பாடசாலைகளில் நன்கொடை கேட்டால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம்

பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். Read more »

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை கடத்த முயற்சி

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read more »

சுட்டி விளக்குகள் விற்ற வர்த்தகர் மீது தாக்குதல்

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read more »

காசோலை மோசடி

கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Read more »

போலி நகைகளை 4 முறை வங்கியில் அடகு வைத்தவர் கைது

தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப்... Read more »

ஈமெயில், எஸ்.எம்.எஸ்.மூலம் பணமோசடி யாழில் அதிகம்; எச்சரிக்கிறார் மத்திய வங்கி அதிகாரி

மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா.சிவதீபன் முன்னெச்சரிக்கை செய்துள்ளார். Read more »

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 125 பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார். Read more »

உதயன், வலம்புரிக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more »

புலிக்கொடியை பறக்க விட்டது யார் ? தேடுகின்றனர் பொலிஸார்

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். Read more »

டெங்குநுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more »

வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குள் முறுகல்

வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கும் பெரும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. Read more »

கனடாவில் யாழைச் சேர்ந்த பெண் வாகனத்துடன் எரித்துக் கொலை

கனடா மொன்றியலில் யாழ். அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார்... Read more »

யாழில் மீண்டும் காணாமல் போதல்

யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார்... Read more »

போலிச் சாமியாரை நம்பி தங்க நகைகளை இழந்த குடும்பம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய... Read more »

கஞ்சா வைத்திருந்த வயோதிபருக்கு விளக்கமறியல்

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். நகரப்பகுதயில் 725 கிராம் கஞ்சாவுடன் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்த வேளையில், யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர்... Read more »

மாணவியை சேஷ்டை செய்த சிங்கள இளைஞர்கள்!- தட்டிக்கேட்டவர்களை அடித்து விரட்டிய பொலிஸ்

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பொலிஸார் அடித்து அதட்டியுள்ளனர்.இச்சம்பவம் இன்று 8 மணியளவில் யாழ். கைதடிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. Read more »

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு எதிராக வழக்கு

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.தேசிய சேமிப்பு வங்கி மற்றும் தி பினான்ஸ் கம்பனிக்கும் இடையிலான பங்குக் கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கொடுக்கல் வாங்கல்... Read more »

இறைவரி திணைக்களத்தில் ஊழல்!- இரகசிய பொலிஸார் விசாரணை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »