Ad Widget

சட்ட வைத்திய அதிகாரியின் அறியாமையினால் தப்பியது 2 ஆயிரம் கிலோ மீன்

arrest_1சட்டவிரோதமான முறையில் டைனமற் வெடி வைத்து பிடிக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மீனுடன் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட கூலர் வாகனம் மீனுடன் திடீரென்று திணைக்கள அலுவலகத்திலிருந்து மாயமாக மறைந்துள்ளது.

கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் யாழ்.அலுவலகத்தில் நேற்று முற்பகல் சுமார் 11:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

தடை செய்யப்பட்டதும் சட்டவிரோதமானதுமான டைனமற் முறையில் வெடி வைத்து பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீனுடன் யாழ்.குருநகர் பகுதியில் வைத்து கூலர் வாகனம் ஒன்று அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு திணைக்களத்தின் யாழ்.அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆயினும் இக்கூலர் வாகனமானது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளுக்கோ அல்லது சோதனை நடவடிக்கைகளுக்கோ உட்படுத்தப்படாமல் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுபவம் இல்லாத காரணத்தினால் சட்டவைத்திய அதிகாரியினால் டைனமற் முறையில் வெடி வைத்து மீன் பிடிக்கப்பட்டதா? என்பது தொடர்பில் அறிக்கைதர முடியாது என்று சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்ததாலேயே வாகனம் தப்பிச் சென்றதாக திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related Posts