- Friday
- July 11th, 2025

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்து 800 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களை விட இந்த வருடம் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக நந்திக்கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நந்திக்கடலை...

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு...

முழங்காவில் பகுதியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது – 18) என்ற இளைஞனை, கடந்த ஒரு வார காலமாக காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன், மாலை...

கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும்,...

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தினையடுத்து அப்பகுதி மக்கள் பெரிதும் பதற்றத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட்டிருந்தன. குறித்த காணிகளைத் துப்பரவாக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது அக்காணிகளில் இருந்த வெடிபொருட்களே வெடித்துள்ளதாக அப்பகுதி...

நாட்டினதும், மக்களினதும் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்....

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான...

சிறைச்சாலையில் வைத்து கைதிகள் தாககப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றசட்டத்தரணிகள் நேற்று நண்பகலிற்கு பின்னர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு...

தனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும் பதவி இலட்சினையையும் பயன்படுத்தி தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதுபோல யாரே மோசடியில் ஈடுபட்டுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்றும் கிளிநொச்சிக்கு கல்வி அமைச்சு வேண்டாம் என்று கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர் தனது அரசியல் நேர்வழியை அதேவழியில் எதிர்கொள்ள முடியாத சில...

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குபட்ட இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதும், குறித்த பகுதிகளுக்கு அருகே மிதிவெடிகள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமக்கு நிரந்தர...

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும்,...

கிளிநொச்சியில் கடந்த 17ம் திகதி விபத்துக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபருடையது என சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் முழங்காவில் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தின் சாரதியையும்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற11 வயது சிறுவன் முழங்காவில் தேவாலய திருவிழாவை...

முல்லைத்தீவு மல்லாவி நகரப்பகுதியில் பண்டாரவன்னியன் சிலை ஒன்று நிறுவப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. எனினும் திறந்து வைக்கப்பட்ட சில வாரங்களிலேயே அச்சிலையின் ஒரு பக்க கை மற்றும் வாள் என்பன உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலையானது சேதமடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்படுவதுடன், இது மாவீரன் பண்டாரவன்னியனை கொச்சைப்டுத்தும் செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழரின் வீரத்தை...

பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து...

சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக்...

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...

தர்மபுரம் கல்லாறு பகுதியில், கடந்த 11ஆம் திகதி அதிகாலை 60 பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஐவரை, தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, ஒருதொகை நகைகள், ஒருதொகை பணம், மூன்று வாள்கள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம்...

எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்...

All posts loaded
No more posts