- Sunday
- July 12th, 2026
யாழ். ஆரியகுளத்து நீர் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தமை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை எனவும் அவ்வாறு முக்கிய பிரச்சினையாக இருந்தால் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆரியகுளம் நீர் சிவப்பாக மாறியமை தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான...
படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். “காரைநகர் கடற்பரப்பில் கடந்த சில வாரங்களாக நீர்கொழும்பு, புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் பகுதியில் உள்ள கடற்படையின் பாவனையில் உள்ள இறங்குதுறையையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்” என, அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்....
யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி,...
யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியிலுள்ள நோதன் பவர்...
எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ்,...
துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு பிரிவு வடடாரங்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனவரி 18ம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்கின்ற நிலையில் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர்....
முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24)...
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...
கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்....
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்...
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறீலங்காப் படையினர் அனுமதியளித்துள்ளனர். இடம்பெயர்ந்து மாவிட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள 130 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, ஊறணிப் பகுதியில் இருந்து அத்தொழிலை...
பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...
சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா?...
ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...
வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு வசதியாக செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அடுத்த வருடம் முதல் செயல்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு...
வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக் கட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் குறித்த பிரதேச சபைக்குட்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவிக்கையில், வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேறும்...
வெளிநாடுகளில் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள அதிநவீன சத்திரசிகிச்சை கூடத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில வைத்திய நிபுணர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள மிகச் சிறந்த வைத்திய கூடம் திரும்பிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமாக இருந்தால், தனியார் வைத்தியசாலைகளின் வருமானம் இழக்கப்படும் என்று கருதியே யாழ்ப்பாணத்தின்...
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில் தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவிடத்தில் குப்பைகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடப்பதாகவும், குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பெயர் குறிப்பிடப்பட்டு “புல்மோட்டையில் கனிய வளத்தையும், கடஹ கஷா நிலக்கரி சுரங்கத்தையும் விற்பதற்கு எதிராக...
Loading posts...
All posts loaded
No more posts
