- Wednesday
- October 14th, 2026
மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைத்து வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக பயணப் பாதை (Dedicated Motorcycle Lane) களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். "நூறுக்கு நூறு " தேசிய பெரு நிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் திட்டத்தின்...
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நேற்று பெய்த மழையினால் பொல்பிட்டிய மொரஹேனேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்....
நிலவும் சீரற்றவானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது....
இன்றைய தினம் பலத்த மழை எதிர்பார்க்கப்படாததால், தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில்...
இலங்கையின் மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக கனமழை பொழிவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும், நாட்டின் பிரபல வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவசர அறிவிப்பு ஒன்றை...
ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன்...
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி...
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க...
மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த...
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினிப் புலனாய்வுப் பிரிவு இன்று (31) மேற்கொண்ட நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும்...
லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன்...
இலங்கை சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்யும் 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் முன்னேற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 11ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஜனவரி மாதம் 17ஆம்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை தலைமை சிறை அதிகாரி நேற்று (30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார். சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய...
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஜனவரி-ஜூன் அரச நிதி ஆய்வறிக்கையில்...
பெந்தோட்ட கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற பெராமோட்டார் விபத்தில் வௌிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய பாலஸ்தீன பெண் ஆவார். பெராமோட்டார் இயந்திரம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் ஓட்டுநராகச் செயற்பட்ட கொலம்பிய நாட்டவர் உயிர்தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம்...
பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பேரூந்துகள் நேற்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன. இந்தப் பேரூந்துகள் சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் தரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தப் புதிய மெட்ரோ...
மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. அவசர வைத்திய சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மிகவும் விரைவாகவும் வினைத்திறனாகவும் சென்றடைவதற்காக இந்தச் சேவையைச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை...
தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்றார். திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி...
எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை தேசிய அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, தற்போது 200 இலங்கை மாணவர்கள் STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிர பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேர்வுச் செயல்பாட்டின் அடிப்படையில், 18...
Loading posts...
All posts loaded
No more posts
