- Wednesday
- October 14th, 2026
கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப்...
வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02...
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவராலேயே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இசுருபாய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட...
சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் படி 2...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில்,...
வத்தளை, கதிரான பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தொன்றின் போது நபரொருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தின் பின்னர் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் (13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 80,000 முதல் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பெருமளவிலான துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களிடம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள்...
இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களிடமிருந்து பணம் வசூலித்த இருவர் நேற்றுமுன்தினம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் தலையீட்டுடன் இஸ்ரேலில் வழங்கப்படும் கட்டுமானம் மற்றும் உணவகத்துறை...
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும் இதுபோன்ற கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400...
தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். "எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அடுத்ததாக உபுல்...
இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபா உயர்வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம்...
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98% ஆனோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு...
நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை நிலவும் காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மாதாந்தத் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533...
அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக...
காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளைக் கடுமையாக மீறிய குற்றத்திற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) கேகாலை மாவட்ட...
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்....
இலங்கைக்கான ஒருநாள் விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார செயலர் ஶ்ரீ விக்ரம் மிஸ்ரி கொழும்பை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை - இந்திய இடையிலான வழமையான உயர் மட்ட பரிமாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயமானது நெருக்கமான இருதரப்பு உறவுகளை மீள வலுப்படுத்தும் அதேவேளை...
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைத்து வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக பயணப் பாதை (Dedicated Motorcycle Lane) களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். "நூறுக்கு நூறு " தேசிய பெரு நிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் திட்டத்தின்...
Loading posts...
All posts loaded
No more posts
