- Saturday
- July 12th, 2025

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.இதன்படி முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட...

புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டை தடுப்பதில் இலங்கை பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாடுகளில் இருந்து விடுபட்ட வாழ்கை ஒன்றை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி, மஹவலி ரிஷ் ஹோட்டலில் இடம்பெற்ற மது,...

யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மஹிந்த, இதனால் தென்பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் வயோதிபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டத்திட்டங்களை தயாரிக்கப் போவதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளார். முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் வயோதிபர்கள் இறந்தவுடன் அவர்களின் உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், உயிரிழந்த வயோதிபர்களின் சொத்துகளுக்காக முரண்பட்டுக்கொள்ளும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாக...

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக (KYANT) மாறியுள்ளது. இது இலங்கையின் வடகிழக்கே 1300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு எவ்வித நேரடி பாதிப்புகளும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் தாயொருவரை கோழிக் கூண்டில் அடைத்து சங்கிலியால் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம் வயோதிப தாயொருவர் கோழிக் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த தாய் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொக்குவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக சிறீலங்காக் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விசாரணையை முன்னெடுக்க விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன....

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து இன்று பிற்பகல் 4 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு நீதிக்காக குரல் எழுப்புமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை வடக்கில் நாளைய...

தென் மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றும் மாணவிகள், வகுப்பறைக்குள் பியர் அருந்திவிட்டு, மோசமான முறையில் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து,...

மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தேவையற்ற விதத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ள அல்லது திரிபுபடுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை பொறுப்பேற்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அவ்வாறு பொறுப்பெற்பவர் நஷ்டமடைய வேண்டியேற்படும் எனவும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற பணத் தாள்களுக்கு மத்திய வங்கியினால் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், கொடுக்கல், வாங்கல் செய்யும்போது இவ்வாறான பணத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும்,...

வங்காளவிரிகுடாவில், இலங்கையின் வடகிழக்காக, 1,400 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் அநேகமான இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கை நேரடியாகப் பாதிக்கப்படாது. எனினும், வடக்கு, தெற்கு, மேல் மற்றும் மலையகப் பகுதிகளில் 100- 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிய பெய்யலாம் எனவும் அத்திணைக்களம்...

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர. அவர் மேலும்...

சிகரெட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்பொழுது அமைச்சரவையினால் ஒரு சிகரெட்டின் விலை 7 ரூபாவினால் உயத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து எதிர்வரும் நாட்களில் ஒரு சிகரெட்டின் விலை 15 வீத வரியினால் அதிகரிக்கப்படும். தற்பொழுது சிகரெட் ஒன்று 42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பீடி, சுருட்டு...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ் மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்ட...

யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் தொடர்பில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச்...

ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மற்றைய பகுதியை நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் திறந்து வைத்துள்ளனர். ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சந்திரலால் அபேகுணவர்த்தனவினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் முறையான உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவால் நேற்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது பாரிய...

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம்...

All posts loaded
No more posts