- Friday
- July 11th, 2025

நாட்டில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு ஊவா , வடமத்திய மத்திய மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் மழை அல்லது மழை...

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையைப் படைக்கும் நோக்கில், காலிமுகத்திடலில் சுமார் 80 ஆயிரம் டொலர் செலவில் பிரமாண்ட நத்தார் மரம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகள்...

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏவுகணை பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறுவதனால், இலங்கை – இந்தியாவுக்கான விமான சேவை இன்று நண்பகல் வரை இடம்பெற மாட்டாதென கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் காலப் பகுதிக்குள் 10 விமானப் போக்குவரத்துக்கள் தாமதித்து இடம்பெறும் எனவும் விமான நிலைய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஜகர்த்தா மற்றும் சிங்கப்புர்...

மோட்டர் சந்தையில் இலங்கையர் ஒருவர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இலங்கையர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் வாகனம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 8 இலட்சம் ரூபா விலைக்கு சந்தைக்கு வரவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மணிக்கு 60 கிலோ மீற்றர்...

மாத்தளை, மஹவெல கலலியத்த பிரதேசத்தில், இளைஞனொருவன் மேற்கொண்ட கத்திக்குத்தில், சுதர்மா குமாரி என்ற யுவதி (வயது 23), உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், நஞ்சு அருந்திய நிலையில், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமிடையிலான காதல் விவகாரமே, இக்கத்திக்குத்துக்கு காரணமென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரம் இன்று(24) இரவு 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்மஸ் மரமானது 325 அடி (100M) உயரமுடையதாக அமைக்கப்பட்டு, உலகிலேயே மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட 221 அடி உயரம் கொண்ட...

இலங்கை துறைமுக வரலாற்றில் முதல் தடவையாக கண்ட்ரி கிரேன் (Gantry Crane) பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொழும்பு துறைமுக அதிகார சபையின் மஹாபொல பயிற்சி நிறுவகத்தின் கப்பல் போக்குவரத்துத் துறை சார்ந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட , துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்...

அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் முதலமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள்...

58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வாகனங்கள் வழங்கப்படவிருந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறு வாகனங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். நேற்று கேட்டேகொட கலப்பு அபிவிருத்தி திட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்....

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை விசேட தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, இன நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தான் ஓய்வு பெற்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தன்னால்...

தனது பிள்ளைகளுக்கு பாடசாலைக் கொப்பிகளை வாங்கொடுக்க முடியவில்லை என்று கூறி, நில்வலா ஆற்றின் நடுவில் நடந்துச் சென்ற பெண்ணை, பொலிஸார் காப்பாற்றியுள்ளர். மாத்தறை, கன்தர, நாவோதுன்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே, இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு புதிய வகுப்புச் செல்லவுள்ள தன்னுடைய 6 பிள்ளைகளுக்கும் கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று...

சுதந்திரமான தனித்துவம் மற்றும் பலதரப்பட்ட அதியுயர் நன்னெறி தரங்களை கொண்ட தொழில் நிபுணத்துவமும் பொறுப்புணர்வும் அமைந்த பலதரப்பட்ட பரந்த அடிப்படையிலான தகவல்கள் மற்றும் யோசனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்புவாய்ந்தவை ஊடகங்களாகும். பொதுமக்களுக்கான ஒன்றுகூடலில் சிறந்த ஜனநாயக அடிப்படையிலான கருத்துக்களை கலந்துரையாடுதல், இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி பேணிப் பாதுகாப்பதற்கான செய்முறையாகும். இதற்கென அரசாங்கம் பயன்தரக்கூடிய செய்தி ஊடக...

அதிக வேகம் கொண்ட 1200 சி.சி.இன்ஜின் சக்தியுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் செல்வாக்குள்ள ஒருவரின் புதல்வரின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இதனை பொலிஸார் மீட்டுள்ளனர். பாதால உலக...

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கிணங்க தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா யாழ்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவரினை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், ஏசியன் ரிபியூன் இணையத்தள செய்தி ஆசிரியருமான கே.பி.ராஜசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் ஏற்பாட்டில்...

யால தேசிய வனாந்தரத்தில், மிருகங்களை பார்வையிடுவதற்கு சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடங்கிய இரண்டு ஜோடியினரின் வெளிநாட்டு நோட்டுக்கள் மற்றும் கெமராக்கள் அடங்கிய பொதியை கெமுனு என்ற யானை விழுங்கிவிட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முறையிடப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர், தங்களுடைய இரண்டு மனைவிகளுடன் சபாரி ஜீப் வண்டியில், யால பட்டநங்கல எனுமிடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது,...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் விசேட சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட சேவை நடவடிக்கைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடல் ஹோல்பேஸ் ஹோட்டலில் விசேட மருத்துவர்களின் சர்வதேச கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்த...

வறட்சியான காலநிலை நிலவினாலும், மின்சார துண்டிப்பு இடம்பெற மாட்டாதென மின்சக்த்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த பத்து வருடங்களில் இவ்வாண்டிலேயே மிகக் குறைவாக பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாளாந்தம் 50 மொகா வாட்ஸ் மின்சாரத்தை சேமிப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சா...

2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவே, தெரிகிறது என, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஏற்றுக் கொள்வதாகவும், இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

வரிவிலக்கு அனுமதி பத்திர திட்டத்தை தவறான பயன்படுத்தியமை குறித்து அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியிலுள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிவிலக்கு...

இலங்கையில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் வீட்டினுள் ஏற்படும் வளி மாசடைவதினால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வளி மாசடைதலும் அதிகரித்துள்ளது. கொழும்பை விட கண்டியில் வளி அதிகளவில் மாசடைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விறகுகளைப் பயன்படுத்தி சமைப்பதால் வீட்டினுள் வளி மாசடைந்து வருகின்றது. அத்துடன், வீட்டில் பயன்படுத்தும் சாம்பிராணி...

All posts loaded
No more posts