பதவியேற்ற உடனேயே தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! மனோ கணேசன் காட்டம்!!

"தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே!" - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள்...

மைத்திரிபால சிறிசேன வெற்றி – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள்...
Ad Widget

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர்...

யாரும் சட்டத்தை கையில் எடுக்காதீர்கள்!

எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைவரும் சட்டத்தை மதித்து செயற்படுமாறும் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இன்று மாலை இலங்கையின் புதிய...

நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம் – பசில், நாமல்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில்...

இலங்கை மக்களுக்கு மைத்திரி நன்றி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்...

மைத்திரி, ரணில் இன்று சத்தியப்பிரமாணம்

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என...

மைத்திரிக்கு மோடி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி...

அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது! நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது

இரு பிரதான வேட்பாளர்களும் வாக்களித்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை காலை தமது வாக்ககளைப் பதிவுசெய்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாக்கை இன்று காலை தனது குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்துகொண்டார். இதேபோன்று பொது எதிரணி சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால...

பாரிஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

பாரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தொிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உலகத்தில் எங்கு இடம்பெற்றாலும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட உலகம் ஒன்றாக சேரவேண்டும்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மெதமுன இல்லத்தில் இருந்து பேசும்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தின்...

ஒரு தொகுதி ஆவணங்கள் சிக்கின?

தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக பொது எதிரணியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிலுள்ள நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் திட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனத் தன்மையினை பாதுகாக்க கோரி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பினை செய்து வருவதுடன் தேர்தல் பிரசாரத்திகதி முடிவடைந்தும் ஜனாதிபதி தனது பிரசாரங்களை அரச ஊடகங்களூடாக பிரசுரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாளை...

தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பில் இராணுவத்தையும் அழைக்கும் சாத்தியம்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 71,100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக பாதுகாப்பு பணிகள் தொடர்பில் இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதன் பொருட்டு இராணுவப் படையணி தயார் நிலையில் உள்ளதுடன் இராணுவ படையணியை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைக்கு பொலிஸாரே முற்று முழுதான...

‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று மஹிந்தவும் கூறியிருக்கிறார்

'பிரபாகரனை நான் 'மிஸ்டர் பிரபாகரன்' என்று சொன்னதாக எனக்கு எதிராக சேறு பூசுகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் பிரபாகரனை 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறியிருக்கின்றார். அவரது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் அவ்வாறே காணப்படுகின்றது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய...

தெளிவாக இருப்போம்: இந்த சிறிசேன அல்ல அந்த சிறிசேன!

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

பொது எதிரணி தேர்தல் பிரசார மேடை மீது துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்!

இரத்தினபுரி, நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல் பிரசாரமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி- ரணில் ஒப்பந்தம் போலியானது | இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading posts...

All posts loaded

No more posts