Ad Widget

புதிய மின் இணைப்புகளுக்கு உயர்வடைந்தது கட்டணம்!

புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணம் இந்த ஆண்டில் இருந்து ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் பொறி யியலாளர் எஸ்.ஞானகணேசன் இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது: (more…)

ஆவணங்களை உரிய வேளையில் உரியமுறையில் பெற்றுக்கொள்ள வேண்டும்.!வலி.கிழக்கு பிரதேச செயலர் எம்.பிரதீபன்.

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டில் சிவில் ஆவணங்களை பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தகுதியான அனைவருக்கும் வழங்கி முடிப்போம்.உரிய சான்றிதழ்கள் இன்றி எதிர்காலத்தில் யாரும் இருத்தல் கூடாது. அதற்கு ஏற்ற முறையில் நடமாடும் சேவைகள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக நடத்தப்படும். (more…)
Ad Widget

குடாநாட்டுக்குள் நுழையும் வாகனங்கள் நாளை முதல் நிறைச் சோதனை அவசியம்!

யாழ். குடாநாட்டுக்குள் பொருள்களுடன் நுழையும் வாகனங்கள் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் நிறை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.அதனடிப்படையில் ஒவ்வொரு வகை வாகனங்களிலும் அவற்றின் கொள்ளவுக்கு ஏற்ப பொருள்களின் நிறை ஏற்றப்பட வேண்டும் என புதிய கட்டுப்பாடு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நியமனம் பெறாத பட்டதாரிகள் மற்றும் HNDIT, HNDE பட்டதாரிகள் விபரங்களை கோருகிறது மாகாண கல்வி அமைச்சு

பட்டதாரி பயிலுனர் சேவையில் கடந்த வருடம் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தமது விபரங்களை வட மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர். (more…)

அரச மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்ற தடை!

அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதைத் தடை செய்யப்படும் இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்தார். (more…)

காணிப் பதிவுக்கான கட்டணத்தில் மாற்றம்

காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கான புதிய கட்டணத் திருத்தம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.காணி உறுதிப்பத்திர பிரதிகளை பெற்றுக்கொள்ளவதற்கான கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர தெரிவித்துள்ளார். (more…)

யாழ். வாக்காளர் இடாப்பு பொதுமக்கள் பார்வைக்கு

2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு பிரதிகள் ஒவ்வொரு பிரதேச கிராம அலுவலர் பிரிவுளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார். (more…)

ஐம்பாதாயிரத்திற்கும் அதிகமாக மாத வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு: நிதி அமைச்சு

மாதாந்தம் 50000 ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாதாந்தம் 50000 முதல் 100000 ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். (more…)

மாதாந்த கட்டணம் செலுத்தாவிடின் உடனடியாகவே மின்சாரம் துண்டிப்பு

மின்பாவனையாளர்களுக்கான மின் கட்டண நடவடிக்கைகள் இந்த வருடம் தொடக்கம் மேலும் இறுக்கமடைகிறது. சுன்னாகம் மின் பொறியியலாளர் ஞானகணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)

பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கவில்லை

அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. (more…)

இலங்கையில் விவாக பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி இதுவரை நடைமுறையில் ஆயிரம் ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளது. (more…)