Ad Widget

வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை!

fineதேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்றில் இந்த தீர்மானம் உத்தேச சட்ட மூலமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மேற்படி வாக்காளர இடாப்பில் பெயர் பதியப்பட்டு தேர்தல்களின் போது வாக்களிக்காத நபர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ள நிலையில் 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கே தற்போது வாக்குரிமை காணப்படுகின்றது எனினும் இனிவரும் காலங்களில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலின் போது வாக்களிக்காத நபர்களிடமிருந்து எவ்வளவு தொகை அறவீடு செய்யப்பட வேண்டும் என இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts